12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Oct 2017 4:00 AM IST (Updated: 8 Oct 2017 2:47 AM IST)
t-max-icont-min-icon

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று மன்னார்குடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார்குடி,

மத்திய அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி ரே‌ஷனில் வழங்கப்படும் உணவு பொருட்களின் அளவை குறைக்க கூடாது. விவசாயத்தை பாதுகாத்து வறட்சியால் இறந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகையை வழங்க வேண்டும். குறைந்தபட்ச மாத ஊதியமாக கேரள அரசு வழங்குவதை போல ரூ.18 ஆயிரத்தை வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். போக்குவரத்து துறையில் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். தொழிற்சங்க அங்கீகார சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும். சாலை பாதுகாப்பு மசோதாவை வாபஸ் வாங்க வேண்டும். பணியிடங்களில் பாலியல் புகார் கமிட்டிகளை அமைத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த கோரியும், இக்கோரிக்கைகளை நிறைவேற்ற அடுத்தமாதம்(நவம்பர்) 9,10,11–ந் தேதிகளில் நடைபெறவுள்ள டெல்லி பாராளுமன்ற முற்றுகை மற்றும் தர்ணா போராட்டத்தை விளக்கியும் சி.ஐ.டி.யூ., தொ.மு.ச., ஏ.ஐ.டி.யூ.சி., ஐ.என்.டி.யூ.சி. ஆகிய 4 சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று மன்னார்குடி போக்குவரத்து பணிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தெருமுனை பிரசாரம்

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு போக்குவரத்து கழக தொ.மு.ச. இணை பொதுச்செயலாளர் நீலமேகம் தலைமை தாங்கினார். பேரவை செயலாளர் பாண்டியன், தொ.மு.ச. மாவட்ட செயலாளர் மகாதேவன், ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் மாவட்ட செயலாளர் சந்திரசேகர்ஆசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட பொருளாளர் புண்ணீஸ்வரன், கட்டிட தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கலைச்செல்வன், விவசாய தொழிலாளர்கள் சங்க நிர்வாகி மகேந்திரன், சி.ஐ.டி.யூ. சார்பில் மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட துணைச்செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் பாண்டியன், பி.எஸ்.என்.எல் சங்க நிர்வாகி பிச்சைக்கண்ணு, சி.ஐ.டி.யூ. மாவட்டக்குழு உறுப்பினர் ரெகுபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மேற்கண்ட கோரிக்கைகளை விளக்கி மன்னார்குடி பெரியார் சிலை, பந்தலடி உள்ளிட்ட இடங்களில் தெருமுனை பிரசாரத்திலும் ஈடுபட்டனர்.


Next Story