தர்மபுரியில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
தர்மபுரியில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும் என்று தர்மபுரியில் நடந்த அரசு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
தர்மபுரி,
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள எண்ணேகொல் அணைக்கட்டில் இருந்து ஒரு வழங்கு கால்வாய் அமைத்து தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கேத்தனஅள்ளி ஏரி, முதலிபட்டி ஏரி, பொம்மனஅள்ளி ஏரி மற்றும் முக்குளம் ஏரி உள்பட 10 ஏரிகள் மற்றும் தும்பலஅள்ளி அணைக்கு நீர் வழங்க வழிவகை செய்யப்படும். இதன் மூலம் 1,103 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அலியாளம் அணைக்கட்டிலிருந்து தர்மபுரி மாவட்டம், தூள்செட்டி ஏரிக்கு நீர் வழங்குவதற்கு ஒரு புதிய பிரதான வழங்கு கால்வாய் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் 495 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.
பாலக்கோடு தாலுகா, அஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் தற்போது ஜெர்தலாவ் கால்வாய் மூலம் வெளியேற்றப்பட்டு, பாசன வசதி செய்து தரப்படுகிறது. இந்த ஜெர்தலாவ் கால்வாயின் நெடுகை 5 ஆயிரம் மீட்டரில் இருந்து ஒரு புதிய வழங்கு கால்வாய் அமைப்பதன் மூலம் அதன் கீழுள்ள 14 ஏரிகளுக்கு நீர் வழங்கிட விரிவான ஆய்வு நடைபெற்று வருகிறது. ஆய்வின் முடிவின்படி மேல்நடவடிக்கை எடுக்கப்படும்.
கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்தின் வலதுபுற கால்வாய் நீட்டிப்பு திட்டமான திண்டல் ஏரி உபரி நீர் கிரியானஹள்ளி அருகே நாகசமுத்திரம் அணைக்கட்டை அடைகிறது. இதில் இருந்து ஒரு புதிய கால்வாய் அமைத்து மொரப்பூர் பகுதியில் உள்ள 30 ஏரிகளுக்கு நீர் வழங்கும் திட்டம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகா, பாளையம்புதூர் கிராமம், மாரியம்மன் கோவில் பள்ளம் அணைக்கட்டை புனரமைத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.
தர்மபுரி நகராட்சியில் தற்போது இரண்டு பஸ் நிலையங்கள் அருகருகே அமைந்துள்ளன. இந்த பஸ் நிலையத்துக்கு நாளொன்றுக்கு 532 பஸ்கள் வந்து செல்கின்றன. பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் பஸ்களின் போக்குவரத்தால் ஏற்படும் இட நெருக்கடியை சமாளிக்க ஒரு புதிய பஸ்நிலையம் அமைக்க வேண்டி உள்ளது.
தர்மபுரி நகருக்கு அருகில் ஏ.ரெட்டிஅள்ளி கிராமம் சோகத்தூர் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் 9 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிட இந்த பகுதி மக்கள் முன்வந்துள்ளனர். இந்த 9 ஏக்கர் நிலத்தை நகராட்சி ஏற்றுக் கொண்டு, அந்த இடத்தில் ஒரு புதிய பஸ் நிலையம் தனியார் மற்றும் நகராட்சி பங்களிப்புடன் படிப்படியாக செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.
பாலக்கோடு, மாரண்டஅள்ளி, மகேந்திரமங்கலம், பஞ்சப்பள்ளி மற்றும் காரிமங்கலம் ஆகிய போலீஸ் நிலையங்களை உள்ளடக்கி, பாலக்கோட்டினைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய காவல் உட்கோட்டம் தோற்றுவித்து காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் அமைக்கப்படும். பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள பஸ் நிலையத்திற்கு “பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம்” எனப் பெயர் சூட்டப்படும்.
தர்மபுரி மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பாலக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு “பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி” எனப் பெயர் சூட்டப்படும். இந்த மாவட்டத்தில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட நல்லம்பள்ளி தாலுகாவில் தற்போது இயங்கிவரும் ஆரம்ப சுகாதார நிலையம் அரசு வட்ட மருத்துவமனையாகவும், காரிமங்கலம் தாலுகாவில் தற்போது இயங்கி வரும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அரசு வட்ட மருத்துவமனையாகவும் தரம் உயர்த்தப்படும். தேர்வு நிலை நகராட்சியாக உள்ள தர்மபுரி நகராட்சி, சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.
பாலக்கோட்டில் இயங்கி வரும் தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் கீழ் நடைபெற்று வரும் பலவகை தொழில்நுட்ப கல்லூரியை அரசே ஏற்று நடத்தும். இது அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரியாக மாற்றப்படும். தர்மபுரியை தலைமையிடமாகக் கொண்டுள்ள கல்வி மாவட்டத்தில் 287 அரசு பள்ளிகள் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. நிர்வாக நலன் கருதி ஒரு புதிய கல்வி மாவட்டம் அமைக்கப்படும். பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பஞ்சப்பள்ளியில் இருந்து தர்மபுரி மாவட்ட எல்லை வரை செல்லும் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 3 கி.மீ. நீளமுடைய சாலையை பொதுமக்களின் போக்குவரத்து வசதி கருதி நெடுஞ்சாலைத்துறைக்கு மாற்றம் செய்யப்படும்.
சிவாடி மற்றும் தர்மபுரி ரெயில் நிலையங்களுக்கு இடையில் ரெயில்வே கடவு எண்.38-க்கு பதிலாக ஒரு புதிய சாலை மேம்பாலம் விரைவில் அமைக்கப்படும். சிவாடி மற்றும் தர்மபுரி ரெயில் நிலையங்களுக்கு இடையில் கடவு எண்.41-க்கு பதிலாக ஒரு புதிய சாலை மேம்பாலம், சித்தேரி சாலையில் ஒரு சிறு பாலம் அமைக்கப்படும். பில்பருத்தி-குருபரஅள்ளி சாலையில் கி.மீ ஒரு சிறுபாலம், அனுமன்தீர்த்தம்-பொய்யப்பட்டி சாலை, நவலை-பெரமாண்டப்பட்டி சாலை ஆகிய 2 இடங்களில் உயர்மட்டப்பாலம் அமைக்கப்படும். பொம்மிடி ஆர்.எஸ். தொப்பையாறு அணை சாலையில் ஏற்கனவே உள்ள குழாய் தரைப்பாலத்திற்கு பதிலாக ஒரு புதிய பாலமும், மல்லசமுத்திரம்-அனுமந்தபுரம் சாலையில் ஒரு பாலமும் கட்டப்படும்.
தர்மபுரி நகரில் அமைந்துள்ள அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தற்போது இரு வேறு இடங்களில் இயங்கி வருகிறது. மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகம் மற்றும் விளையாட்டு மைதானம் அமைக்க வனத்துறைக்கு சொந்தமான இடத்தை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மாவட்டத்தில் தற்போது அரசு கலைக்கல்லூரி கட்டிடத்தில் இயங்கிவரும் கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகத்திற்கு, அனைத்து வசதிகளுடன் கூடிய சொந்தக் கட்டிடம் ஒரு கோடியே 69 லட்சம் ரூபாய் செலவில் கட்டித் தரப்படும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இந்த விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. சிங்காரம், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் எம்.ஜி.எஸ்.சிவப்பிரகாசம், என்.பி.பெரியண்ணன், எம்.கே.வேலுமணி, சி.கோபால், எம்.பி.செல்வராஜ், தர்மபுரி மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கேசவன், காரிமங்கலம் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சி.மாணிக்கம், மாணவரணி ஒன்றிய செயலாளர் பி.ரவிசங்கர், அரசு போக்குவரத்துக்கழக அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் பரமசிவம், மண்டல தலைவர் என்.சிவம், முன்னாள் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளர் வருவான்வடிவேலன், முன்னாள் ஊராட்சி தலைவர் கூத்தப்பாடி ரவி, முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், விஸ்வநாதன், அரங்கநாதன், மதிவாணன், முன்னாள் நகராட்சி துணை செயலாளர் பூக்கடை ரவி, முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் யசோதா மதிவாணன், பாலக்கோடு கூட்டுறவு வீட்டுவசதி சங்க தலைவர் ஆதிவெங்கடாசலம், காரிமங்கலம் நகர செயலாளர் காந்தி, ஊராட்சி செயலாளர் சண்முகம், முன்னாள் கவுன்சிலர் மாதையன் மற்றும் ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்கள், பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.
முன்னதாக தர்மபுரியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, சட்டசபை சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், கடம்பூர் ராஜூ ஆகியோர் பார்வையிட்டனர்.

Related Tags :
Next Story