மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் கடத்தி கற்பழிப்பு


மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் கடத்தி கற்பழிப்பு
x
தினத்தந்தி 8 Oct 2017 3:45 AM IST (Updated: 8 Oct 2017 3:06 AM IST)
t-max-icont-min-icon

மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை கடத்தி கற்பழித்த ஆட்டோ டிரைவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

மும்பை மலாடை சேர்ந்த 17 வயது மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். கடந்த மாதம் பெற்றோர் அவரை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு வேலைக்கு சென்றனர். பின்னர் மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது, அந்த இளம்பெண்ணை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தனர். பின்னர் தின்தோஷி போலீசில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்தநிலையில், இளம்பெண் கடந்த 3-ந் தேதி அன்று வீட்டிற்கு வந்தார். பெற்றோர் இளம்பெண்ணை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

அங்கு பரிசோதனையில் அவர் கற்பழிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. போலீசார் இதுபற்றி தீவிர விசாரணை நடத்தினார்கள். இதில், மலாடை சேர்ந்த கம்லேஷ் சர்மா(வயது36), ராம்தஹால் யாதவ் (40) ஆகிய இரண்டு ஆட்டோ டிரைவர்கள் இளம்பெண்ணை கடத்தி கற்பழித்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனநலம் பாதிக்கப்பட்ட இந்த இளம்பெண் கற்பழிக்கப்பட்டது இது முதல் முறை அல்ல. கடந்த அக்டோபர் மாதம் 5 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டார். ஆர்தர் ரோடு ஜெயிலில் அவர்களை அடையாளம் காண்பிக்க இருந்த நிலையில், அவர் 2 பேரால் கடத்தி கற்பழிக்கப்பட்டார். தற்போது இது மூன்றாவது சம்பவம் ஆகும்.

Next Story