பெத்திசெமினார் பள்ளியில் விண்வெளி அறிவியல் கண்காட்சி கவர்னர் கிரண்பெடி தொடங்கி வைத்தார்


பெத்திசெமினார் பள்ளியில் விண்வெளி அறிவியல் கண்காட்சி கவர்னர் கிரண்பெடி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 8 Oct 2017 4:00 AM IST (Updated: 8 Oct 2017 3:41 AM IST)
t-max-icont-min-icon

உலக விண்வெளி வாரம் 2017–ஐ முன்னிட்டு புதுவை பெத்திசெமினார் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான்

புதுச்சேரி,

விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் உப்பளத்தில் உள்ள பெத்திசெமினார் தொடக்க பள்ளி வளாகத்தில் விண்வெளி அறிவியல் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க விழாவில் கவர்னர் கிரண்பெடி கலந்துகொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். பள்ளியின் முதல்வர் பாஸ்கல் ராஜ் வரவேற்று பேசினார்.

விழாவில் அறிவியல் அறிஞர்கள் கும்பகர்ணன், வெங்கட்ராமன் ஆகியோர் விண்வெளி பற்றிய செய்திகளை மாணவர்களுக்கு விளக்கிக் கூறினர். இந்த கண்காட்சியில் உலக உருண்டை, டெங்கு விழிப்புணர்வு, பரிணாம வளர்ச்சி, செயற்கை கோள் செலுத்தும் உபகரணம் உள்பட 250–க்கும் மேற்பட்ட படைப்புகள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக காந்திவீதியில் உள்ள பெத்திசெமினார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து அறிவியல் கண்காட்சி தொடர்பான ஊர்வலம் நடைபெற்றது. இதனை புதுச்சேரி – கடலூர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ–மாணவிகள் கலந்துகொண்டனர். இந்த கண்காட்சி இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் நடைபெற உள்ளது. நாளை நடைபெறும் நிறைவு விழாவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்து கொள்கிறார்.



Next Story