டெங்குவை ஒழிக்க சுற்றுப்புறத்தை தூய்மையாக வையுங்கள் அமைச்சர் கமலக்கண்ணன் வேண்டுகோள்
வீடுகளை மட்டுமின்றி சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டால் டெங்குவை முற்றிலும் ஒழிக்க முடியும் என்று அமைச்சர் கமலக்கண்ணன் கூறினார்.
காரைக்கால்,
காரைக்காலை சேர்ந்த பூவம் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள குப்புசெட்டிசாவடி மற்றும் அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுத்தமான காரைக்கால் இயக்கத்தின் ஒரு பகுதியாக சிறப்பு தூய்மைப்பணி மற்றும் டெங்கு விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கி, அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் தோட்டத்திற்கு சென்று அங்கு கிடந்த குப்பைகள் மற்றும்தேங்காய் மட்டைகள், பழைய பிளாஸ்டிக் பொருட்களை அகற்றினார். தொடர்ந்து அங்கு கொசு மருந்துகள் அடிக்கப்பட்டன. மேலும், கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களைக் கொண்டு டெங்கு சம்பந்தமான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அதுபோன்று சுகாதாரத்துறை சார்பில் வீடு வீடாகச் சென்று யாருக்காவது டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதா? என்று செவிலியர்கள் பரிசோதித்தனர்.
நிகழ்ச்சியில் வேளாண் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தூய்மைப்பணி மேற்கொண்டனர்.
தொடர்ந்து அமைச்சர் கமலக் கண்ணன் நிருபர்களிடம் கூறுகையில், ‘நிலத்தடி நீரை உறிஞ்சும் கருவேல மரங்கள் அதிகளவில் மண்டிக் கிடக்கின்றன. இவற்றை இப்பகுதி மக்களே ஒன்று சேர்ந்து வெட்டி வேரோடு அழிக்க வேண்டும். இதை ஒரு சேவையாக செய்ய வேண்டும். மக்கள் தங்கள் வீடுகளை மட்டுமின்றி சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத் துக் கொண்டால் டெங்குவை முற்றிலும் ஒழிக்க முடியும்’ என்றார். நிகழ்ச்சியில் காரைக்கால் மாவட்ட கலெக்டர் கேசவன், கூடுதல் கலெக்டர் மங்களாட் தினேஷ், உள்ளாட்சித்துறை துணை இயக்குனர் மகாலிங்கம், கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர், கல்வித்துறை துணை இயக்குனர் சுப்ரமணியன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அல்லி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story