‘திரைப்படங்களால் பயங்கரவாதத்தை களைய முடியும்’
‘‘திரைப்படங்களால் பயங்கரவாதத்தை களைய முடியும்’’ என்று மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.
மும்பை,
மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி நேற்று மும்பையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட சுற்றுலா மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:–இந்தியா சர்வதேச திரைப்பட சுற்றுலா மையமாக மாறும் அளவுக்கு அனைத்து வசதிகளையும், வளங்களையும் கொண்டுள்ளது. பயங்கரவாதம், முற்போக்கு தன்மையை வெளிக்கொண்டு வருவதிலும், வேரறுப்பதிலும் சினிமா முக்கிய பங்கு வகிக்கிறது.
சமூக, கலாசார மற்றும் சீர்திருத்த விவகாரங்களில் பயனுள்ள செய்தி அளிப்பதில் இந்திய திரைப்படங்கள் வெற்றி கண்டிருக்கின்றன.
திரைப்படங்களால் பயங்கரவாதத்தை களைய முடியும். உலகம் முழுவதும் திரைப்பட இயக்குனர்களால் விரும்பப்படும் நாடாக இந்தியா திகழ்கிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, குஜராத் முதல் வடகிழக்கு மாநிலங்கள் வரை உள்நாட்டு தயாரிப்பாளர்களை மட்டுமின்றி, வெளிநாட்டு தயாரிப்பாளர்களையும் இந்தியா ஈர்க்கிறது. சினிமாத்துறைக்கு தொழில்துறை அந்தஸ்து பெற்றுள்ள குறிப்பிட்ட சில நாடுகளில், இந்தியாவும் ஒன்றாக திகழ்கிறது.இவ்வாறு முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.
Related Tags :
Next Story