ஓமலூர், ஆட்டையாம்பட்டி, போச்சம்பள்ளி பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கு கர்ப்பிணி உள்பட 3 பேர் பலி
ஓமலூர், ஆட்டையாம்பட்டி, போச்சம்பள்ளி பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கு 7 மாத கர்ப்பிணி உள்பட 3 பேர் பலியானார்கள்.
சேலம்,
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கோட்டகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் அம்மு என்ற நிவாஷினி (வயது 20). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் சி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். நிவாஷினியை அவருடைய உறவினர் ஒருவருக்கு திருமணம் செய்வதற்காக உறுதி செய்திருந்தனர். அடுத்த மாதம் நிச்சயதார்த்தம் நடைபெறுவதாக இருந்தது.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிவாஷினி ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் புறநோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் காய்ச்சல் குணமாகாததால் அவர் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது டெங்கு காய்ச்சல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அங்கு நிவாஷினியின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. பின்னர் உறவினர்கள் அவரை நேற்று தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே நிவாஷினி பரிதாபமாக இறந்தார். அவருடைய உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.
திருமணத்திற்காக நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில் டெங்கு காய்ச்சலுக்கு இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுவரை கோட்டகவுண்டம்பட்டியில் காய்ச்சலுக்கு 3 மாணவர்கள் மற்றும் பெண் என மொத்தம் 4 பேர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள தாதம்பட்டி அப்பாவு நகரைச் சேர்ந்தவர் சீனு. இவருடைய மனைவி கவிதா (வயது 24). இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. கவிதா தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். கவிதா போச்சம்பள்ளி ராசி நகரில் குடியிருந்து வந்தார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு அவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பிறகு அவர் வீடு திரும்பினார். இந்த நிலையில் கவிதாவிற்கு மீண்டும் காய்ச்சல் வந்தது. இதைத்தொடர்ந்து அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அதில் அவருக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்ததாகவும், தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்குமாறு அறிவுறுத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து அவரை தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த போது அங்கு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என கவிதாவின் உறவினர்கள் புகார் கூறினார்கள். இதனால் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கவிதாவை பரிசோதனை செய்த டாக்டர்கள், வயிற்றில் உள்ள குழந்தை இறந்து விட்டதாகவும், கவிதாவிற்கு மட்டும் தீவிர சிகிச்சை அளிப்பதாகவும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை கவிதாவும் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இந்த சம்பவம் போச்சம்பள்ளி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள கூலிப்பட்டியை சேர்ந்தவர் மோகன் (வயது 33), விவசாயி. இவர் விசைத்தறி தொழிலும் செய்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக இளம்பிள்ளை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுள்ளார். இருப்பினும் காய்ச்சல் குணமாகவில்லை. அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே மோகன் பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு பரிமளா(22) என்ற மனைவி உள்ளார். குழந்தைகள் இல்லை. டெங்கு காய்ச்சலுக்கு விவசாயி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story