உஷாரய்யா உஷாரு..
சுயதொழில் செய்து, ஓரளவு நன்றாக சம்பாதித்துக்கொண்டிருக்கும் அந்த இளைஞருக்கு பெண் தேடினார்கள். நிறைய படித்து, பக்கத்து மாநிலத்தில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் பெண்ணை பற்றிய தகவல் கிடைத்தது.
சுயதொழில் செய்து, ஓரளவு நன்றாக சம்பாதித்துக்கொண்டிருக்கும் அந்த இளைஞருக்கு பெண் தேடினார்கள். நிறைய படித்து, பக்கத்து மாநிலத்தில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் பெண்ணை பற்றிய தகவல் கிடைத்தது. பெண்ணின் அழகு, ஸ்டைல் எல்லாம் வரனை கவர்ந்ததால், திருமணத்திற்கு சம்மதித்தார்.
நிச்சயதார்த்தத்திற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தபோது பெண், ‘வேலையை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஒருபோதும் கூறக்கூடாது. இப்போது வேலை பார்க்கும் அந்த மாநிலத்திலே தொடர்ந்து வேலை செய்வேன். சொந்த மாநிலத்திற்கு பணி இட மாற்றம் வாங்கி விட்டு வர வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தக்கூடாது’ என்பன போன்ற நிபந்தனைகளை விதித்தாள்.
உடனே வரனின் தாயார், ‘அதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது. வேறு பெண் பார்த்துக்கொள்வோம்’ என்று கூறினாலும், அந்த இளைஞரால் அழகான அந்த பெண்ணை தவிர்க்க முடியவில்லை. அதனால், இளைஞரும் - அந்த பெண்ணும் சந்தித்து பேசி, ‘திருமணத்திற்குப் பிறகு மாதத்தில் ஐந்து நாட்கள் அவள், அவரது வீட்டில் தங்க வேண்டும் என்றும், மாதத்தில் ஐந்து நாட்கள் அவர், அவள் வேலை பார்க்கும் இடத்திற்கு சென்று அங்கு தங்கி இருக்க வேண்டும்’ என்றும் முடிவு செய்தார்கள்.
அவர், அவளை திருமணம் செய்து கொள்வதில் பிடிவாதமாக இருந்ததால், அவரது பெற்றோரும் அரைகுறை மனதோடு சம்மதித்தார்கள். நிச்சயதார்த்தம் நடந்தது. பெண்ணும் அதில் கலந்து கொண்டாள்.
ஒரு வாரம் கடந்தது. அவர் தனது வருங்கால மனைவியுடன் செல்போனில் தொடர்பு கொண்டார். அவள் ஆர்வமின்றி பேசினாள். அடுத்தடுத்த நாட்கள் பேச முயற்சித்தபோது அவள் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தாள். ‘வாட்ஸ் அப்’பில் அனுப்பிய தகவல் களையும் அவள் திறந்து பார்க்கவில்லை. தொடர்ந்து பல நாட்கள் அழைப்பும் ‘மிஸ்டு கால்’ ஆனது. ஆனாலும் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாத அந்த இளைஞர், அவளுக்காக அவள் வேலை பார்க்கும் நிறுவனத்தின் விலாசத்திற்கு சில பரிசுகளை அனுப்பி வைத்தார். அவள் அதை பெற்றுக்கொண்டாள். ஆனால் அதற்கு நன்றி கூட தெரிவிக்கவில்லை.
முற்றிலும் அவள் தொடர்பை துண்டித்ததுபோல தெரிந்தாலும், அந்த இளைஞர் அதை தனது பெற்றோரிடமோ - பெண்ணின் பெற்றோரிடமோ தெரிவிக்கவில்லை. அந்த அளவுக்கு அவளது அழகால் கவரப்பட்டிருந்தார்.
அடுத்து என்ன செய்வது? என்று அவர் யோசித்து கொண்டிருந்த நேரத்தில், இளைஞரின் நிறுவனத்திற்கு நடுத்தர வயது நபர் ஒருவர் வந்தார். அவர் வட கிழக்கு மாநிலத்தை சேர்ந்தவர் போன்ற சாயலில் இருந்தார். இளைஞரிடம் தனியாக சந்தித்து பேச வேண்டும் என்றவர் கைகளில், அவர் தனது வருங்கால மனைவிக்கு அனுப்பிய பரிசு பொட்டலங்கள் பிரிக்கப்படாமல் இருந்தன. அவைகளை எடுத்து அந்த இளைஞரிடம் கொடுத்தார்.
அவர் அதிர்ச்சியோடு பார்க்க... ‘தப்பாக நினைச்சுக்காதீங்க சார். நானும், உங்களுக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணும் முறைப்படி பதிவு திருமணம் செய்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. இந்த உண்மையை அவள், தனது பெற்றோரிடம் சொல்லாமல் மறைக் கிறாள். ஏற்கனவே இரண்டு முறை அவளுக்கு நிச்சயம் நடந்திருக்கிறது. ஒவ்வொருவரிடமும் நான் தான் சென்று விளக்கி திருமண ஏற்பாட்டை நிறுத்துகிறேன். எனக்கே இது அசிங்கமாகத் தெரிகிறது’ என்ற அவர், ஒரு கவரில் இருந்து தனக்கும் - அவளுக்கும் திருமணம் நடந்ததற்கான பதிவு சான்றிதழின் நகலை எடுத்து அவரிடம் கொடுத்து, ‘இதை எப்படியாவது அவளது பெற்றோரின் கவனத்திற்கு கொண்டு சென்று உண்மையை புரிய வையுங்கள். இல்லாவிட்டால் என்றாவது ஒருநாள் அவள் என்னை உதறிவிட்டு, சொந்த மாநிலத்திற்கு வந்து இன்னொரு திருமணம் செய்தாலும் செய்து விடுவாள்’ என்று கவலையோடு சொன்னார்.
இருவரும் ஒருவரை ஒருவர் பரிதாபமாக பார்த்துக்கொண்டார்கள். பின்பு இந்த இளைஞர், அவரிடம் அவளது பெற்றோரின் விலாசத்தை கொடுத்து, ‘நீங்களே போய் அவர் களிடம் உண்மையை சொல்லுங்கள்’ என்று கூறி அனுப்பி வைத்திருக்கிறார்.
இப்படியும் சில சம்பவங்கள் நடக்குதுங்க!
-உஷாரு வரும்.

Related Tags :
Next Story