செய்தி தரும் சேதி - இன்மைத் தத்துவம்
ஆங்கிலத்தில் ஜீரோ (zero) என்ற சொல்லுக்குத் தமிழில் இணையான சொல்லாக எதைப் பயன்படுத்துவது என்கிற வினா உள்ளது.

‘பூஜ்யம்’ என்பது வடமொழிச் சொல். பற்று எதுவும் இல்லாதவர்களையும் ‘பூஜ்ய’ என சமஸ்கிருதத்தில் கூறுவது உண்டு. ‘சுழி’ என்று மொழிபெயர்ப்பவர்கள் உண்டு. ‘சுழி’க்கு அதிர்ஷ்டம் என்ற பொருளும் உண்டு. மாட்டைச் சுழி பார்த்து வாங்குவார்கள்.
‘சூனியம்’ என்ற பொருளில் அந்த எண்ணைப் பயன்படுத்து கிறது வடக்கு. ‘எதுவும் இல்லை’ என்பதே அதன் விளக்கம். ‘இன்மை’ என்ற சொல்லை ஜீரோவிற்கு இணையாகத் தமிழில் பயன்படுத்தலாம் எனக்கருதுகிறேன்.
‘இன்மை’ பல பண்புகள் கொண்ட எண்.
அதை எந்த எண்ணோடு பெருக்கினாலும் இன்மையே வரும்.
எதோடு கூட்டினாலும் அந்த எண்ணே வரும்.
அது இரட்டை எண், இரண்டால் வகுத்தால் பதிலி இல்லாமல் விடை வரும்.
அது நேர்முறை எண்ணுமல்ல, எதிர்மறை எண்ணுமல்ல.
அது இடத்தைக் குறியிட உதவிடும் எண்.
அது எதிர்மறைக்கும், நேர்முறைக்கும் இடையில் உள்ள எண்.
இன்மை(0)க்கு மதிப்பு ஏதுமில்லை; அதன் முன் எண்ணிருந்தால் மட்டுமே மதிப்பு என்று ஆசிரியர்கள் கணித வகுப்பில் கற்றுத் தருவதுண்டு. தொலைபேசி அழைப்புகளில் எண்ணுக்கு முன் இருக்கும் இன்மைக்கு மதிப்பு. வெளிநாட்டு அழைப்பா, வெளியூர் அழைப்பா என்பதை குறிப்பிட்ட எண்களுக்கு முன்பிருக்கும் இன்மையே தீர்மானிக்கிறது.
இயற்பியலில் ‘முழுமை பூஜ்யம்’ என்பது இருப்பதிலேயே குறைந்தபட்ச வெப்பநிலையைக் குறிக்கும். அது 273.15 டிகிரி செல்ஸியஸ். அந்தக் குளிரில் அணுக்கள் இயக்கத்தை நிறுத்திவிடும்.
பூஜ்யம் வெப்பநிலையும் முக்கியம். அப்போது நீர் திரவநிலை யிலிருந்து திடநிலைக்கு மாறி பனிக்கட்டியாய் பரிமளிக்கிறது. திடமானதும் மிதப்பது பனிக்கட்டி மட்டுமே.
கணினி 0, 1 என்ற பைனரி அமைப்பைக் கொண்டே வடிவமைக்கப்பட்ட சாதனம்.
நகர் தொடங்கும் இடத்தை பூஜ்யத்துடன் இணைத்து அழைப்பது வழக்கம். சென்னை தொடங்கும் இடத்தை ‘சென்னை-பூஜ்யம்’ என்று அடையாளப்படுத்துவார்கள்.
பொருளாதாரத்தில் ‘பூஜ்ய அடிப்படை வரவு-செலவுக் கணக்கு’ (zero based budget) என்பது சிறப்பான அம்சம். அந்த முறையில் எல்லா செலவுகளையும் நியாயப்படுத்த வேண்டியது அவசியம். அநாவசியமான செலவுகளைத் தவிர்க்கும் உத்தி அது.
மக்கள் தொகையில் ‘பூஜ்ய வளர்ச்சி’ இருக்கும் நாடுகளே வளர்ந்த நாடுகள். பிறப்பு விகிதமும், இறப்பு விகிதமும் சரிக்குச் சமமாக இருக்கும்போது அது பூஜ்ய வளர்ச்சி. பெரும்பாலான நாடுகளில் பிறப்பு அதிகம், இறப்பு குறைவு. இந்தியாவில் 1920-ம் ஆண்டு வரை மக்கள்தொகை சீராக இருந்தது. அதிகப் பிறப்பாலும், தொற்றுநோய் இறப்பின் விகிதத்தை அதிகப்படுத்தியதாலும் இருந்த ஆரோக்கியமற்ற பூஜ்ய வளர்ச்சி அது. பின்னர் நச்சுயிர்க்கொல்லிகள் கண்டுபிடிக்கப்பட்டதால் இறப்பு குறைந்தது; பிறப்போ தொடர்ந்து ஜனத்தொகை உயர்ந்தது.
சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துவது ‘பூஜ்யக் கரிம நிலை’. வெளியாகும் கரியமில வாயுவை உறிஞ்சிக்கொள்ளுமளவு தாவரங்கள் இருந்தாலும், குறைவான மாசுக்காற்று வெளியாகும்படி தரமான சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சாதனங்கள் இருந்தாலும் கரிமநிலை பூஜ்யம் (carbon neutrality) சாத்தியமாகும். காற்று மண்டலத்தில் கரியமிலவாயு 0.03 சதவீதம் இருக்க வேண்டும். அதிகமானால் பனிமலைகள் உருகும், வெள்ளம் உருவாகும், வெப்பம் அதிகரிக்கும், தோல் புற்று தோன்றும்.
ஆரோக்கியமான வரி மேலாண்மையில் பூஜ்ய வரிக் கோட்பாடு உண்டு. ஈட்டுகிற பணத்தையெல்லாம் சரியாக முதலீடு செய்வது வரி ஏய்ப்பு (tax evasion) அல்ல, மாறாக அது வரி தவிர்ப்பு (tax avoidance). சட்டத்திற்குட்பட்டது வரி தவிர்ப்பு. நாடு பல திட்டங் களுக்குத் தேவைப்படும் நிதியைத் திரட்டும்பொருட்டு சில குறிப்பிட்ட முதலீடுகளில் பணத்தைச் செலுத்த ஊக்குவிப்பதுண்டு.
மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளில் வெளிவரும் கழிவு நீர் மண்ணை, நீரை, சுற்றுப்புற நிலங்களை பாதிக்கவல்லது. எனவே ரசாயனம் கலந்துள்ள நீரை சுத்திகரித்து தூயநீர்போல அனுப்ப வேண்டும் என்ற விதிமுறையுண்டு. அதற்கு ‘பூஜ்ய வெளியேற்றம்’ (zero discharge) என்று பெயர். சில நாடுகளில் இயற்கைப் பல்லடுக்கு ஆவியாக்குதல் (natural evaporatior) முறை செயல்படுத்தப்படுகிறது.
அதன் அடிப்படையில் திருப்பூரில் உள்ள ஆடை வடிவமைப்பு நிறுவனம் (NIFT - TEA) மூலம் 2010-ம் ஆண்டு நாங்கள் சுற்றுச்சூழல் வனத்துறையிலிருந்தபோது சுத்திகரிக்கும் விதத்தைச் செயல்படுத்த முயன்றோம். பரிசோதனை முறையிலான அத்திட்டத்தை இந்தியத் தொழில்நுட்ப நிலைய வல்லுநர்கள் தரச்சான்று வழங்கிப் பாராட்டினார்கள். சின்ன முதலீடுகளுக்கு அது சிறந்த அருமருந்து.
பூஜ்யக் குறைபாடு (zero defect) என்பது தொழிற்சாலை மேலாண்மையில் மிகப்பெரிய இலக்கு. உற்பத்தியாகும் பொருட்களில் ஒன்றுகூட சேதாரமில்லாமல் பார்த்துக்கொள்வது பூஜ்யக் குறைபாடு. பொதுவாக ஆயிரம் பொருட்களுக்கு ஒன்று குறையுடன் இருந்தால் அதைப் பல நிறுவனங்கள் ஏற்றுக்கொள்வதுண்டு. ஆனால் ஜப்பானில் ஒன்றுகூட குறையுடன் இருக்கக்கூடாது என்கின்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதை எட்டவும் முடிகிறது.
குற்றவியலில் யார் குற்றத்தைச் செய்திருப்பார்கள் என நெருங்கிவிடுவதை ‘ஜீரோயிங் இன்’ (zeroing in) என்று குறிப்பிடுவார்கள். தடயங்களை வைத்து குற்றவாளியின் இடத்தை நெருங்கி வளைப்பதை இப்படி ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள்.
இருக்கும் தடயத்தை வைத்து மட்டுமல்ல, இல்லாத தடயத்தையும் வைத்து குற்றவாளி யாரெனக் கண்டுபிடிக்க முடியும்.
ஷெர்லாக் ஹோம்ஸ் கதையொன்றில் பணக்காரர் ஒருவர் கொலையாகியிருப்பார். அவருடைய நாய் இரவில் எந்த நேரத்தில் குரைத்தது என அண்டை வீட்டாரிடம் விசாரிப்பார்கள். ‘நாய் குரைக்கவே இல்லை’ என்பதுதான் அங்கு தடயம். அப்போது நாய்க்குப் பழக்கமான யாரோ அந்தக் கொலையைச் செய்திருக்க வேண்டும் எனப் புரிந்துகொண்டு வீட்டு வேலைக்காரனே நள்ளிரவில் அந்தக் கொலையைச் செய்தான் என்று துப்புத் துலக்குவார்கள்.
ஒரு பொருளை உயரத்திலிருந்து போட்டால் அது ஆற்றலோடு விழுகிறது. ஒரு முறை வாகனத்தில் செல்கிறபோது எதிரே ஒருவர் கையிலிருந்து தவறிய கைப்பேசி காற்றில் வேகமாக வந்து இன்னொரு காரில் மோதி பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. மோதிய பொருளின் பலம் மட்டுமல்ல, பருமன் மட்டுமல்ல, வேகமும் சேதத்தைத் தீர்மானிக்கிறது. ஒரு பொருள் பூஜ்ய ஆற்றல் நிலையில் (zeropoint energy) இருப்பதை இயற்பியல் சொல்கிறது. தரையில் இருக்கும்போதும், இயக்கமில்லாமல் இருக்கும்போதும் இது நிகழ்கிறது.
ரசாயனத்தில் ‘டெட்ரா நியூட்ரான்’ என்கிற தோராய தனிமத்திற்கு பூஜ்ய அணு எண் அளிக்கப்பட்டிருக்கிறது.
‘பூஜ்யம்’ என்கிற இன்மையை கிரேக்க வல்லுநர்களால் கண்டறிய முடியவில்லை. பிதாகரஸ், ஆர்க்கிமிடிஸ் போன்ற அறிஞர் களுக்கு சாத்தியமாகாதது இந்தியாவுக்கு சாத்தியமானதற்கு நம் தத்துவப் பின்னணியும் காரணம்.
‘இன்மை’யில் நாம் தொடங்கிய இடத்திற்கே வர வேண்டும். அதுவே தத்துவப் பார்வை. நம் மூலத்தை அறிவதே ஞானம். நம் தற்போதைய இருப்பு நிலையானதல்ல என்று அறிவது, நம் பிறப்பிற்கு முன்பு இருந்த நம் முகத்தை உணர்வது, முகவரியற்றுப் போவது ஆகியவை அதற்கான வழிகள்.
‘நான் யார்’ என்பதைத் துழாவுவது ‘நான் யாருமில்லை’, ‘நான் எதுவுமில்லை’, ‘நான் வெறுமை’ என்பதை உணர்வதே. தன் முனைப்பு முற்றிலும் அகன்று நம்மை முற்றிலுமாக இருத்தலில் கரைக்கும்போது தோன்றும் மாபெரும் புரிதலே மெய்ஞானம். அப்போது புல்லில், பூவில், மண்ணில், மரத்தில், கல்லில், கடலில், பறவையில், பட்டாம்பூச்சியில், எறும்பில், எருமையில் நாம் பிரதி பலிப்பதை உணர்வோம். அதுவே பூரண விழிப்புணர்வு.
புத்தர் சூனியத் தத்துவத்தை முன்வைத்தார். ‘உருவமே வெறுமை, வெறுமையே உருவம்’ (Form is emptiness and emptiness is form) என்று இன்னமும் மடாலயங்களில் உச்சரித்துவிட்டு தியானத்தைத் தொடங்குவார்கள்.
‘காலியாக இருப்பது’ என்பது ஒன்றுமில்லாமல் இருப்பதல்ல. அனைத்தையும் உள்ளடக்கியது. ‘வெறுமை’ என்பது இல்லாமை அல்ல - நிரப்பாமல் இருப்பது.
ஆதிசங்கரர் ‘அத்வைதம்’ என்ற தத்துவத்தை முன்மொழிந்தபோது, அறையில் இருக்கும் வெற்றிடத்திற்கும், பானையில் இருக்கும் வெற்றிடத்திற்கும் வேறுபாடு ஏதுமில்லை என்று தெளிவு படுத்தி ஒரே நிலவு நீர்நிலைகளில் பிரதிபலிப்பது போன்றது பரமாத்மா ஜீவாத்மாக்களில் பரவியிருப்பது எனப் பகர்ந்தார்.
தாவோ வெற்றிடமே பயன்பாடு என்றது. அறையை நாம் பயன்படுத்துவது அதன் சுவர்களால் என்பதுபோலத் தோன்றினாலும் நாம் அவற்றிற்குள் அமைந்திருக்கும் காலியிடத்திலேயே கட்டில் போட்டுப் படுக்கிறோம், நாற்காலி போட்டு அமர்கிறோம், மேசை போட்டு எழுதுகிறோம்.
உண்மை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு மனிதர்களால் அடையாளம் காணப்படும் என்பதற்கு பாரம்பரிய விதிகள் மட்டுமல்ல, பூஜ்யத்தை அறிந்ததும் உதாரணம்.
மாயன் இன மக்கள் லத்தீன் அமெரிக்காவில் இன்மையின் பயன்பாட்டை அறிந்திருந்தார்கள். பாபிலோனியர்களும் அதன் பண்பை உணர்ந் திருந்தார்கள். ஆனால் அதைப் புள்ளியாகக் குறியீடு செய்து கி.பி. 628-ம் ஆண்டு அறிவித்த வானவியல் நிபுணரும், கணித வல்லுநருமான பிரம்மகுப்தரே அதற்குப் பங்களித்த பண்பாளர்.
எதுவுமில்லாதபோது அதை ஏன் குறிப்பிட வேண்டும் என்ற எண்ணம் அதற்கான வடிவத்தைத்தரப் பலருக்கும் தடையாக இருந்தது.
குவாலியரில் உள்ள கோவில் ஒன்றில் இன்மை வரிவடிவம் கல்வெட்டாகப் பதிந்திருக்கிறது. அந்தக் கல்வெட்டு கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சார்ந்தது. அதுவே தொன்மையான சான்று என்று இதுகாறும் கருதப்பட்டது.
பக்ஷாலி என்கிற இந்திய ஓலைச்சுவடியில் அதன் வடிவம் புள்ளியாகக் குறியீடு செய்யப்பட்டிருக் கிறது. அது 70 மரப்பட்டைகளாலான பண்டைய ஆவணம். அது புத்தத் துறவிகளுக்குப் பயிற்சிக் கையேடு.
1881-ம் ஆண்டு அந்தச் சுவடிகளை உள்ளூர் விவசாயி ஒருவர் கண்டெடுத்தார். அது கண்டுபிடிக் கப்பட்ட பக்ஷாலி பாகிஸ்தானில் இருக்கிறது. 1902-ம் ஆண்டு முதல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நூலகத்தில் இருக்கிறது. அதைக் கார்பன் டேட்டிங் செய்தபோது அது கி.பி. 224-க்கும் கி.பி. 383-க்கும் இடைப்பட்ட காலத்தைச் சார்ந்த சுவடியென அறியப்பட்டிருக்கிறது.
எண்ணங்கள் பூஜ்யத்தை அடைவதே மவுனம். மவுனம் என்பது சொற்களற்ற தன்மையல்ல; எண்ணங்களற்ற நிலை. பவுத்தம் அதை வலியுறுத்துவதாலேயே ‘இன்மை’யை அவர்கள் உலகிற்குத் தந்த பெருமையைப் பெற முடிந்தது என்பதே இச்செய்தி தரும் சேதி.
(செய்திகள் தொடரும்)

Related Tags :
Next Story