திறந்த வெளிப் பள்ளி
தெருவோரங்களில் வசிக்கும் குழந்தைகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக வங்கிப் பணியை ராஜினாமா செய்துவிட்டு களம் இறங்கி இருக்கிறார், தருணா.
தெருவோரங்களில் வசிக்கும் குழந்தைகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக வங்கிப் பணியை ராஜினாமா செய்துவிட்டு களம் இறங்கி இருக்கிறார், தருணா. அவருடைய இந்த முடிவுக்கு அவர் சிறுவயதில் தான் படிப்பை தொடர முடியாமல் அனுபவித்த கஷ்டங்களே காரணம்.
“நான் பள்ளி, கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது எங்களுடைய குடும்பம் நிதி சுமையால் சிரமப்பட்டது. மூன்று வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோம். பல இரவுகளை பட்டினி வயிற்றோடு கழித் திருக்கிறேன். என் நிலைமையை நண்பர்கள் புரிந்து கொண்டு உதவினார்கள். நல்ல உள்ளம் படைத்த அவர்களுடைய தயவால் என் படிப்பை நிறைவு செய்தேன்” என்கிறார்.
30 வயதாகும் தருணா, உத்திரபிரதேச மாநிலம் கஜியாபாத்தை சேர்ந்தவர். படித்து முடித்ததும் வங்கி வேலையில் சேர்ந்திருக்கிறார். வேலைக்கு செல்லும்போதும், திரும்பி வரும்போதும் அவருடைய பகுதியை சேர்ந்த தெருவோர குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் விளையாடுவதையே முழுநேர பொழுதுபோக்காக கொண்டிருப்பதை கவனித்திருக்கிறார். அப்போது தான் அனுபவித்த கஷ்டங்கள் மனத்திரையில் நிழலாட, அந்த குழந்தைகளிடத்தில் கல்வியின் அவசியத்தை வலியுறுத்த முடிவெடுத்திருக்கிறார். வேலைக்கு சென்று வீடு திரும்பியதும், அந்த குழந்தைகளுடனேயே நேரத்தை செலவிட்டிருக்கிறார்.
“நான் தினமும் மாலை 5 மணிக்கு பணி முடிந்து திரும்பியதும், அவர்களோடு இணைந்து கொள்வேன். குறைந்தபட்சம் தினமும் மூன்று முதல் நான்கு மணி நேரங்களை அவர்களோடு செலவளிப்பேன். அடிப்படை கல்வியை கற்றுக்கொடுப்பேன். அவர்களோடு ஒன்றாக சேர்ந்து பாடுவேன், ஆடுவேன். அப்படி ஆடி, பாடி விளையாடியே கல்வியையும் புகுத்திவிடுவேன். அதனால் அவர்கள் மகிழ்ச்சியான மனநிலை கல்வியை ஆர்வமாக கற்றுக்கொள்ள தொடங்கினார்கள். இவர்களில் சில குழந்தைகள் முதலில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்திருக்கிறார்கள். பின்பு குடும்ப சூழ்நிலையால் பள்ளிப்படிப்பை கைவிட்டிருக்கிறார்கள்” என்கிறார்.
வங்கிப் பணி முடிந்த பிறகு குழந்தைகளுக்கு கல்வியை புகட்டுவது நாளடைவில் சிரமம் மிகுந்த வேலையாக மாறியிருக்கிறது. தருணாவின் பெற்றோரும் அவருக்கு திருமணம் செய்து வைப்பதற்கு முயற்சி எடுத்திருக்கிறார்கள். அதனால் குழந்தைகளிடம் இருந்து பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடுமோ என்று கலங்கி இருக்கிறார்.
“எனது குடும்பத்தினர் நான் திருமணம் செய்து கொண்டு சீக்கிரம் செட்டிலாகிவிட வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தனர். திருமணமே செய்தாலும் குழந்தைகளுடன் செலவிடும் நேரத்திற்கு ஒருபோதும் இடையூறு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அதனை பெற்றோர் ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ளவே இல்லை. நான் சமரசம் செய்து கொள்ளாமல் பணிக்கு மத்தியிலும் குழந்தைகளுக்கு தேவையான நேரத்தை ஒதுக்கினேன்” என்கிறார்.
தருணாவின் முயற்சியை அவருடைய நண்பர்களும் ஆதரித்திருக் கிறார்கள். அவர்களின் துணையோடு தொண்டு நிறுவனம் ஒன்றை நிறுவி குழந்தைகளுக்கு முழு நேர கல்வி கற்றுக்கொடுக்க தொடங்கி ‘திறந்தவெளி பள்ளி’ ஒன்றை தொடங்கி இருக்கிறார். அதனை நிர்வகிக்க தான் பார்த்து வந்த வங்கிப் பணியை ராஜினாமா செய்திருக்கிறார். ஆனால் தருணாவின் பள்ளியில் குறைவான குழந்தைகளே சேர்ந்திருக்கிறார்கள். மாலை நேரத்தில் தான் கல்வி கற்றுக் கொடுத்தபோது ஓடோடி வந்த குழந்தைகளின் எண்ணிக்கை குறைவதற்கு என்ன காரணம் என்று ஆலோசித்து இருக்கிறார். மதிய வேளை உணவு கட்டாயம் வழங்கினால்தான் குழந்தைகளை பெற்றோர் அனுப்பி வைப்பார்கள் என்பது தெரியவந்திருக்கிறது. அதற்கும் தன்னுடைய பள்ளி படிப்பின்போது உதவிய நண்பர்கள் துணை நிற்க, மதியவேளை உணவு கொடுக்க தொடங்கி இருக்கிறார். குழந்தைகளுக்கு தொடர்ந்து மதிய உணவு கிடைக்க இணையதளங்கள் வழியாக நிதியும் திரட்டி வருகிறார்.

Related Tags :
Next Story