காரைக்கால் மீனவர்கள் 10 பேர் சிறைபிடிப்பு இலங்கை கடற்படை அட்டூழியம்
கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த காரைக்கால் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.
காரைக்கால்,
காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பதும், இந்த பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு மீனவர்களை மீட்பதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.
இந்தநிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம், காரைக்கால்மேட்டை சேர்ந்த குணசேகரன் என்பவருக்கு சொந்தமான விசைப் படகில் அதே ஊரை சேர்ந்த கந்தசாமி(வயது38), வினித் (22), சண்முகராஜ்(25), செல்வம்(33), கிளிஞ்சல்மேட்டை சேர்ந்த பிரதீப்(20), அபிசேக்(20), திருமுல்லைவாசலை சேர்ந்த குணா(23), அக்கரைபேட்டையை சேர்ந்த அஜீத்குமார்(20), சாமந்தான்பேட்டையை சேர்ந்த தர்மராஜ்(40) மற்றும் திரு-பட்டினம் பட்டினச்சேரியை சேர்ந்த சிவபெருமாள்(38) ஆகிய 10 மீனவர்கள் கடந்த 5-ந் தேதியன்று நள்ளிரவில் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
10 மீனவர்கள் சிறை பிடிப்பு
நேற்று முன்தினம் (சனிக் கிழமை) நள்ளிரவில் அவர்கள் கோடியக்கரைக்கு தென் கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது சிறிய ரோந்து கப்பலில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர். அத்துமீறி இலங்கை கடற்பகுதிக்குள் வந்து மீன் பிடித்ததாக கூறி மீனவர்கள் 10 பேரையும் சிறைபிடித்தனர். பின்னர் அவர்களை விசைப்படகுடன் இலங்கை கொண்டு சென்று காங்கேசன்துறை கடற்படை முகாமில் ஒப்படைத்தனர். அங்கு மீனவர்களிடம் விசாரித்த இலங்கை கடற்படையினர் நேற்று அதிகாலை அங்குள்ள உள்ளூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதைத் தொடர்ந்து போலீசார் காரைக்கால் மீனவர்கள் 10 பேரையும் ஊர்க்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
அவர்களிடம் விசாரித்த நீதிபதி வருகிற 20-ந் தேதி வரை காவலில் வைக்கும்படி உத்தரவிட்டதை தொடர்ந்து 10 மீனவர்களும் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.
குடும்பத்தினர் அதிர்ச்சி
இதுபற்றி காரைக்கால்மேடு பஞ்சாயத்தார் மற்றும் படகு உரிமையாளருக்கு தகவல் தெரியவந்தது. அதைக் கேட்டதும் படகு உரிமையாளர் மற்றும் மீனவர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். அவர்கள் முதல்-அமைச்சர் நாராயணசாமியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மீனவர்களையும், படகையும் மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர். அதற்கு இதுசம்பந்தமாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதாகவும், வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜுடன் தொலைபேசி மூலம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக நாராயணசாமி உறுதி அளித்தார்.

Related Tags :
Next Story