மக்களின் பிரச்சினைக்காக போராடாத நடிகர்கள் முதல்-அமைச்சர் பதவிக்கு ஆசைப்படுகிறார்கள்
மக்களின் பிரச்சினைக்காக போராடாத நடிகர்கள் முதல்-அமைச்சர் பதவிக்கு ஆசைப்படுகிறார்கள் என்று குள்ளஞ்சாவடியில் நடந்த தமிழக வாழ்வுரிமை கட்சி பொதுக்குழு கூட்டத்தில் தி.வேல்முருகன் பேசினார்.
குறிஞ்சிப்பாடி,
தமிழக வாழ்வுரிமை கட்சியின் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் குள்ளஞ்சாவடியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பஞ்சமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முருகன், ஒன்றிய செயலாளர்கள் தனுசு, தணிகாசலம், கருணாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி செயலாளர் சுந்தர் வரவேற்றார்.
கூட்டத்தில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தினார். பின்னர் அவர் பேசியதாவது:-
ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி தொடங்கி 7-வது ஆண்டினை நோக்கி வளர்ந்து வருகிறது. உலகில் எங்கெல்லாம் தமிழின மக்களுக்கு கெடுதல் நடந்தால் அதனை உடனடியாக தட்டிக்கேட்கும் ஒரே கட்சி நமது கட்சிதான். அதேபோல் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் இளைஞர்கள் பட்டாளம் உள்ள கட்சி. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்தவித நன்மைகள் செய்ய வில்லை. மக்களின் பிரச்சினைக்காக போராடவும் இல்லை. ஆனால் அவர்கள் முதல்-அமைச்சர் பதவிக்கு ஆசைப்படுகிறார்கள். முல்லை பெரியார், தாமிரபரணி, காவேரி, பாலாறு, ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கும், தமிழக மக்களின் எல்லா பிரச்சினைகளுக்காகவும் போராடி வருகின்ற விவசாய குடும்பத்தில் பிறந்த நான், முதல்-அமைச்சராகக்கூடாதா?. அந்த பதவிக்கு ஆசைப்படக்கூடாதா?. கட்சி நிர்வாகிகள் அனைவரும் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநில தொழிற்சங்க பொறுப்பாளர் ஜம்புலிங்கம், பொறியாளர் கண்ணன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் மீனாட்சிப்பேட்டை பழனிவேலு, ஒன்றிய செயலாளர்கள் அய்யப்பன், தயாநிதி, ரிச்சர்டு தேவநாதன், குமாரவேல், முருகன், ராஜமோகன், மாநில மாணவரணி அருள்பாபு, ராம்பிரசாத், அருள்செல்வன், வைரக்கண்ணு, செந்தில், குமார், சிவபிரகாஷ், குப்புசாமி, பாலகிருஷ்ணன், பாலா, பாக்கியராஜ், செந்தூர்பாண்டி, தலைமை கழக பேச்சாளர் சுப்புராயன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய செயலாளர் வீர.பாலமுருகன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story