மின்கம்பங்களில் தீப்பந்தம் ஏற்றி கிராம மக்கள் போராட்டம்
மந்தாரக்குப்பம் அருகே மின்கம்பங்களில் தீப்பந்தம் ஏற்றி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
மந்தாரக்குப்பம்,
மந்தாரக்குப்பம் அருகே வடக்கு வெள்ளூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 3 மற்றும் 5-வது வார்டுகளில் உள்ள மின்கம்பங்களில் விளக்குகள் எரியவில்லை. வடக்கு வெள்ளூர் கிராமத்தில் இருந்து மந்தாரக்குப்பம் பஸ் நிலையத்துக்கு செல்ல ஒரு கிலோ மீட்டர் தூரம் சாலை உள்ளது. இரவு நேரங்களில் அந்த வழியாக வாகன ஓட்டிகள், பாதசாரிகள் செல்வதற்காக சாலையின் இருபுறமும் மின்கம்பங்கள் நடப்பட்டு, மின் விளக்கு வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மின்விளக்குகளும் கடந்த சில மாதங்களாக எரியவில்லை.
இது குறித்து அந்த கிராம மக்கள், ஊராட்சி செயலாளரிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இரவு நேரங்களில் சாலையும், 3 மற்றும் 5-வது வார்டுகளில் உள்ள தெருக்களும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்மநபர்கள், வழிப்பறி, நகை பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வடக்கு வெள்ளூர் கிராம மக்கள், மின்கம்பங்களில் தீப்பந்தம் ஏற்றி போராட்டம் நடத்தினர். இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு எரியாத மின் விளக்குகளை சரிசெய்தனர். அதுவும் ஒரு வாரம் கூட எரியவில்லை. மீண்டும் பழுதாகி விட்டது. மின்கம்பங்களில் தரமான விளக்குகள் பொரு த்த வேண்டும். ஒரு வாரம் மின்கம்பங்களில் தீப்பந்தம் ஏற்றி போராட்டம் நடத்துவோம். அதற்குள் மின்கம்பங்களில் விளக்கு எரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றனர்.

Related Tags :
Next Story