சென்னை திருமுல்லைவாயலில் பன்றி காய்ச்சலுக்கு பெண் பலி
சென்னை திருமுல்லைவாயலில் பன்றி காய்ச்சலால் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆவடி,
சென்னை திருமுல்லைவாயல் சி.டி.எச். சாலையை சேர்ந்தவர் இமயவர்மன். இவர், ஆவடியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்ததாரராக பனியாற்றுகிறார். இவருடைய மனைவி குணவதி (வயது 48). இவர், கடந்த ஒரு வாரமாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.
இதற்காக அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் காய்ச்சல் குணமாகாததால் அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தனர். அப்போது குணவதிக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் அவரை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் இரவு குணவதி பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்து வரும் நிலையில், குணவதி பன்றி காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் இடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story