அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டம் கேரள அரசிடமிருந்து தமிழக அரசு பாடம் கற்க வேண்டும்
கேரளாவில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், கேரள அரசிடமிருந்து தமிழக அரசு முற்போக்கு பாடம் கற்க வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
கேரளாவில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வருவது, சிந்தைக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றாக அமைந்துள்ளது. அங்கே அர்ச்சகர் பணி காலியாக உள்ள 62 இடங்களுக்கு திருவிதாங்கூர் தேவசம் வாரியம் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமித்துள்ளது. இதில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் 6 பேர் இடம்பெற்றுள்ளனர் என்பது பெருமையோடு குறிப்பிடத்தக்கது. பழங்குடி இனத்தவர், இதர பிற்படுத்தப்பட்டவர்கள் என மொத்தமாக 36 பேர் அர்ச்சகராகும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
கேரளாவில் உள்ள மற்ற கோவில்களிலும் இந்த நடைமுறையை பின்பற்ற அங்கே ஆட்சி செய்யும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான அரசு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் வரவேற்புக்கும், பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் உரியன.
கடந்த 2006-ம் ஆண்டில் 5-வது முறையாகத் தமிழகத்தின் முதல்-அமைச்சராக கருணாநிதி ஏற்றநிலையில், முதல் நடவடிக்கையாக அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கானத் தனிச்சட்டத்தை நிறைவேற்றினார். அனைத்து சமுதாயங்களையும் சேர்ந்த 207 பேர், உரிய பயிற்சி பெற்று, அர்ச்சகராகும் தகுதியையும், அதற்குரிய பட்டயத்தையும் பெற்றனர். வரலாற்றுப் புரட்சியாக நடந்த இந்த மாற்றங்களை ஏற்க இயலாமல், ஒரு சிலர் எதிர்ப்புக்காட்டி உச்சநீதிமன்றம் வரை சென்று, அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவதற்குத் தடையாணை பெற்றனர்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடைபெற்ற நிலையில், 9 ஆண்டுகளுக்குப் பிறகு 16.12.2015 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், தமிழ்நாடு அரசின் (தி.மு.க. அரசின்) அனைத்து சாதியினரும், அர்ச்சகராகும் சட்டம் செல்லும் என்று தெரிவித்தனர். எனினும், அத்தீர்ப்பின் பகுதி 43-ல், ஒவ்வொரு நியமனமும் செய்யப்பட்டு, அதனால் பாதிக்கப்பட்டவர் வழக்குப் போட்டால் அதன்படிக்கான சட்டப்பரிகாரமே இறுதித் தீர்வாக அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை காரணம் காட்டி, தி.மு.க. அரசின் சட்டத்தை நிறைவேற்றுவதா என்ற காழ்ப்புணர்வுடன் அ.தி.மு.க. அரசு செயல்பட்டதால், பயிற்சி பெற்ற அனைத்து சாதி அர்ச்சகர்கள் பணி நியமனம் செய்யப்படாமல் இருக்கின்றனர். அ.தி.மு.க. அரசு இன்றளவும் கண்டுகொள்ளாத நிலையில்தான், அண்டை மாநிலமான கேரளாவில், தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் உள்ளிட்ட பிற சமூகங்களைச் சேர்ந்த 62 பேரை அர்ச்சகராக நியமிக்கும் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, அரசாணை என்பதை கடந்து, தனி சட்டமே நிறைவேற்றப்பட்ட நிலையிலும், அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க மனமில்லாத ஒரு அரசு இப்போதும் ஆட்சி செய்து வருவது, திராவிட கோட்பாடுகளுக்கு எதிரானதாக உள்ளது. ஆகம பயிற்சி பெற்ற அனைத்து சமுதாயத்தினரும் அர்ச்சகராக நியமிக்கப்படுவதே சமூக நீதியாகும்.
அதனை நிலைநாட்ட, கேரள அரசிடமிருந்து தமிழக அரசு முற்போக்கு பாடம் கற்று, உடனடியாகச் செயல்பட வேண்டுமென வலியுறுத்துவதுடன், மத்திய பா.ஜ.க. அரசுக்குத்தொண்டூழியம் செய்வதையே தனது நிரந்தர கடமையாக கொண்டிருக்கும் குதிரை பேர மாநில அரசு இனியும் அலட்சியமாக செயல்பட்டால் தி.மு.க. தனது தோழமை சக்திகளுடன் களம் காணும் என எச்சரிக்கவும் கடமைப்பட்டுள்ளேன்.
இவ்வாறு அறிக்கையில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story