ரெயிலில் அடிப்பட்டு வாலிபர் சாவு நைட்டி அணிந்த நிலையில் பிணமாக கிடந்தார்


ரெயிலில் அடிப்பட்டு வாலிபர் சாவு நைட்டி அணிந்த நிலையில் பிணமாக கிடந்தார்
x
தினத்தந்தி 9 Oct 2017 4:45 AM IST (Updated: 9 Oct 2017 3:50 AM IST)
t-max-icont-min-icon

ஆரல்வாய்மொழி அருகே ரெயிலில் அடிப்பட்டு வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவர் நைட்டி அணிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி அருகே உள்ள திருமலைபுரம், சிறியகுளம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது25), கூலி தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்தநிலையில், மணிகண்டன் நேற்று காலை சிறியகுளம் பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

அவர் அந்த வழியாக சென்ற ரெயிலில் அடிப்பட்டு இறந்ததாக தெரிகிறது. இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை பார்வையிட்டனர்.

இறந்த மணிகண்டன் பெண்கள் அணியும் நைட்டி அணிந்த நிலையில் பிணமாக கிடந்தார். தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில் மணிகண்டனை குறித்து பல தகவல்கள் தெரிய வந்தன.  

இவருக்கு இரவு வேளையில் பெண்களின் ஆடைகளை அணிந்து உலா வரும் விசித்திர பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. அதன்படி, இரவு நைட்டி அணிந்து தண்டவாளம் பகுதியில் உலா சென்ற போது, ரெயில் மோதி இறந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story