மராட்டிய சட்டசபையை கலைத்து விட்டு தேர்தலை சந்திக்க தயாரா?
தைரியம் இருந்தால் மராட்டிய சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க தயாரா? என்று பா.ஜனதாவுக்கு உத்தவ்தாக்கரே சவால் விடுத்துள்ளார்.
மும்பை,
மராட்டியத்தில் ஆளும் பாரதீய ஜனதா- சிவசேனா கூட்டணியில் அடிக்கடி பனிப்போர் ஏற்படுவது வழக்கம்.
மேலும், மத்திய, மாநில அரசுகளின் செயல்பாட்டை சிவசேனா நேரடியாக சாடுவதுடன், ஆட்சியில் இருந்து வெளியேறி அரசை கவிழ்ப்பதாகவும் மிரட்டல் விடுத்தது. இது பா.ஜனதாவுக்கு அதிர்ச்சி அளித்தது.
இந்த நிலையில், முன்னாள் முதல்-மந்திரி நாராயண் ரானே காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதாக சமீபத்தில் அறிவித்தார். அவரை பா.ஜனதா கூட்டணியில் சேர்ப்பதற்கு ஆரம்பம் முதலே சிவசேனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருந்தாலும், அதனை பா.ஜனதா கண்டுகொள்ளவில்லை.
அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மாநில பா.ஜனதா தலைவர் ராவ்சாகேப் தன்வே ஆகியோர் 65 வயது நாராயண் ரானேயை அடுத்தடுத்து சந்தித்து பேசி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமாறு அழைப்பு விடுத்தனர். இது, சிவசேனாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக கூட்டணி கட்சிகளிடையே மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், நாந்தெட் மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு சிவசேனா வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, மாநில அரசுக்கு சவால் விடும் தொனியில் அவர் பேசியதாவது:-
உங்களுக்கு (பா.ஜனதா) தைரியம் இருந்தால், மராட்டிய சட்டசபையை கலைத்துவிட்டு மீண்டும் தேர்தலை சந்திக்க தயாரா?. உங்களுக்கு சிவசேனாவின் பலத்தை காட்டுகிறோம். மோடி அலை வீசிய போதும் கூட, சிவசேனாவின் பெயரால் தான் பா.ஜனதாவுக்கு வாக்குகள் கிடைத்தது.
நான் இன்றைக்கு சேனலில் செய்தி பார்த்தேன். அப்போது, குஜராத் தேர்தலையொட்டி பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டதை காண நேர்ந்தது. மேலும், சிறுவயதில் தான் படித்த பள்ளிக்கூடத்துக்கு சென்று அவர் பார்வையிட்டார்.
தேர்தலுக்கு இன்னமும் 2 மாதமே உள்ள நிலையில், அவருக்கு திடீரென பள்ளிக்கூட நினைவுகள் உதயமானது எப்படி? இதுநாள் வரை அந்த பள்ளிக்கூடத்துக்கு சென்று பார்வையிட வேண்டும் என்று அவருக்கு ஏன் தோன்றவில்லை?.
இவ்வாறு உத்தவ் தாக்கரே பேசினார்.

Related Tags :
Next Story