ஆண்டிமடம் அருகே லாரியில் கொலை செய்யப்பட்டு கிடந்தவரின் உடல் அடையாளம் தெரிந்தது
ஆண்டிமடம் அருகே லாரியில் கொலை செய்யப்பட்டு கிடந்த நபரின் உடல் அடையாளம் தெரிந்தது. இதில் தொடர்புடைய கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வரதராஜன்பேட்டை,
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள திருகளப்பூர் கிராம சுடுகாடு பகுதியில் நேற்று முன்தினம் கேட்பாரற்று நின்று கொண்டிருந்த ஒரு லாரியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். அந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்தனர். அதில் லாரியில் இருந்த ஒரு ஓட்டுனர் உரிமத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்த போது, அது கொலை செய்யப்பட்டு கிடந்த நபருக்கு உரியது தான் என்பதை போலீசாரால் உறுதி படுத்த முடியவில்லை.
மேலும் அந்த லாரியின் ஆர்.சி. புத்தகத்தை போலீசார் பார்வையிட்டு, அதில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த லாரி கன்னியாகுமாரி மாவட்டம் காப்புக்காடு விளாத்திவிளை கிராமத்தை சேர்ந்த கிளாட்வின் (வயது 37) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. இதனால் கொலை செய்யப்பட்ட நபர் கிளாட்வினாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.
இதையடுத்து ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்த கொலை செய்யப்பட்ட நபரின் உடலை, கிளாட்வினின் உறவினர்களுக்கு போலீசார் நேற்று அடையாளம் காண்பித்தனர். அப்போது தான் கொலை செய்யப்பட்டது லாரி உரிமையாளர் கிளாட்வின் என்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டது. இதனால் அதிர்ச்சியில் உறைந்து போன கிளாட்வினின் உறவினர்கள், அவரது உடலை பார்த்து கதறி துடித்தனர்.
மேலும் கிளாட்வின் தனது லாரி மூலம் மணல் அள்ளி விற்கும் தொழில் செய்து வந்தார். மேலும் தற்காலிக டிரைவர்களை நியமித்து லாரியை ஓட்டி வந்தார். கடந்த சில மாதங்களாக மணல் அள்ளும் தொழிலில் தீவிரமாக இருந்ததால் கிளாட்வின் வீட்டுக்கு வரவில்லை. மேலும் செல்போனிலேயே பேசி நலம் விசாரித்து குடும்ப செலவுக்கு பணம் அனுப்பி வைப்பார். கிளாட்வினை இந்த மாதிரி கொடூரமான முறையில் பார்ப்போம் என கனவிலும் கூட நினைத்து பார்க்கவில்லை என கிளாட்வினின் உறவினர்கள் போலீசில் தெரிவித்தனர்.
மேலும் கடலூர் மாவட்டம் கூடலையாத்தூர் வெள்ளாற்றில் மணல் அள்ளுவதற்கான அனுமதி சீட்டை போலீசார் லாரியில் இருந்து கைப்பற்றி அடுத்த கட்ட விசாரணையை தொடங்கி இருக்கின்றனர். கிளாட்வினிடம் வேலை பார்த்த லாரி டிரைவர் உள்பட சிலர் தான் தகராறில் ஈடுபட்டு அவரை கொலை செய்திருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர். அதன்படி கடந்த சில நாட்களாக கிளாட்வினுடன் லாரியில் வேலை பார்த்த நபர்கள் குறித்த விவரங்களை, அவரது தொழில்முறை நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிளாட்வின் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து கொலையாளிகளை பிடித்த பின்னரே தெரிய வரும். யூகத்தின் அடிப்படையில் பதில் கூற முடியாது. தனிப்படை அமைத்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறோம் என போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். லாரி உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story