கடமலைக்குண்டு அருகே சாலையில் பரவிக்கிடக்கும் மணலால் விபத்தில் சிக்கும் வாகனங்கள்
கடமலைக்குண்டு அருகே, சாலையில் பரவிக்கிடக்கும் மணலால் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன.
கடமலைக்குண்டு,
கடமலைக்குண்டு ஒன்றியம் துரைச்சாமிபுரத்தில் இருந்து கடமலைக்குண்டு வரை அமைக்கப்பட்டுள்ள தார்சாலை பெரும்பாலும் மலையடிவார பகுதிகளிலும், வைகை ஆற்றங்கரை ஓரமும் அமைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக கடமலைக்குண்டு பகுதியில் பெய்த மழை காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலையில் ஓடியது. அப்போது ஆற்று நீருடன் அடித்துவரப்பட்ட மணல் துரைச்சாமிபுரம்-கடமலைக் குண்டு சாலையில் குவியத்தொடங்கியது.
இதன் காரணமாக துரைச்சாமிபுரம்-கடமலைக்குண்டு சாலை முழுவதும் மணல் பரவிக்கிடக்கிறது. இதையடுத்து அந்த வழியாக செல்லும் வாகனங்கள் பெரும் சிரமத்துக்கு பின்னரே சாலையை கடந்து செல்லும் நிலை உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் வளைவுகளில் திரும்பும் போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், துரைச்சாமிபுரம்-கடமலைக்குண்டு சாலையில் மணல் பரவி கிடப்பதால் வாகனங்கள் விரைவாக செல்ல முடிவதில்லை. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் விபத்துகளும் ஏற்படுகின்றன. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் சாலையில் பரவி கிடக்கும் மணலை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் விபத்துகள் நடப்பது தொடர்கதையாகவே உள்ளது. எனவே சாலையில் பரவிக்கிடக்கும் மணலை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மீண்டும் சாலையில் மணல் குவியாமல் தடுக்க சாலையின் இருபுறமும் தடுப்புகளை அமைக்க வேண்டும் என்றனர்.

Related Tags :
Next Story