மேல்மலையனூர் அக்னி குளத்தை தூர்வார வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
மேல்மலையனூர் அக்னி குளத்தை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
மேல்மலையனூர்,
மேல்மலையனூரில் அக்னி குளம் உள்ளது. மழைக்காலங்களில் இந்த குளத்தில் சேமிக்கப்படும் தண்ணீரால் அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து காணப்பட்டது. இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருந்து வந்தது. இந்த குளத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரியான முறையில் பராமரிக்காமல் விட்டுவிட்டனர். இதனால் குளம் தூர்ந்து போனதால் மழைக்காலங்களில் அங்கு அதிக அளவில் தண்ணீர் சேமித்து வைக்கமுடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதால் பொது மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து அக்னி குளத்தை தூர்வாருவதோடு, அங்கு கிடக்கும் பாறைகளை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சுப்பிர மணியன் தூர்ந்து போய் உள்ள அக்னி குளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம் குளத்தை உடனே தூர்வாரி பாறைகளை அகற்ற தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குளத்தை சுற்றி தடுப்பு சுவர் அமைப்பதோடு, மின் விளக்கு வசதியும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட திட்ட அலுவலர் மகேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சொக்கநாதன், வெங்கடேசன், மண்டல துணை தாசில்தார் ஏழுமலை, சமூக நலத்திட்ட தாசில்தார் அலெக்சாண்டர், வருவாய் ஆய்வாளர் சுதாகர், கிராம நிர்வாக அலுவலர் கேசவன், ஊராட்சி செயலர் ரமேஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story