அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Oct 2017 4:00 AM IST (Updated: 10 Oct 2017 1:18 AM IST)
t-max-icont-min-icon

கடம்பத்தூர் அருகே உள்ள அகரம் பகுதியில் 300–க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் அருகே உள்ள அகரம் பகுதியில் 300–க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு வசிப்பவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அந்த குடியிருப்பு நிர்வாகி சரிவர செய்து தரவில்லை என்று கூறப்படுகிறது. மயான பூமியும் அமைத்து தரப்படாததால் இறந்தவர் உடலை அடக்கம் செய்ய அவதிப்பட்டு வருகிறார்கள்.

எனவே தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி குடியிருப்பை சேர்ந்த 100–க்கும் மேற்பட்டோர் அந்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தராத குடியிருப்பு நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.


Next Story