குடிபோதையில் சாராயக் கடையில் தகராறு: தாக்கப்பட்ட தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு


குடிபோதையில் சாராயக் கடையில் தகராறு: தாக்கப்பட்ட தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு
x
தினத்தந்தி 10 Oct 2017 3:30 AM IST (Updated: 10 Oct 2017 2:08 AM IST)
t-max-icont-min-icon

குடிபோதையில் சாராயக் கடையில் ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்ட தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

பாகூர்,

பாகூர் அருகே உள்ள மதிகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் அய்யனார் (வயது 50), கோலப்பொடி விற்கும் தொழிலாளி. இவருடைய மனைவி விஜயா. இவர்களுக்கு கங்காதரன் என்ற மகனும், நதியா என்ற மகளும் உள்ளனர்.

கடந்த மாதம் 20–ந் தேதி அய்யனார், அதே பகுதியை சேர்ந்த முருகன் மற்றும் உச்சிமேடு கிராமத்தை சேர்ந்த மயில் ஆகியோருடன் அங்குள்ள ஒரு சாராயக்கடையில் சாராயம் குடித்தார். போதை தலைக்கேறியதும் அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முருகன், மயில் இருவரும் சேர்ந்து அய்யனாரை திட்டி, அங்கு கிடந்த உருட்டுக்கட்டை மற்றும் கற்களால் சரமாரியாக தாக்கினர். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் மயங்கி விழுந்தார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அய்யனாரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த தகராறு குறித்து கிருமாம்பாக்கம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் தன்வந்திரி, முனுசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய முருகனை கைது செய்தனர்.

இந்த நிலையில் தீவிர சிகிச்சையில் இருந்த அய்யப்பன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்துபோனார். இதையடுத்து அடிதடி வழக்கை கொலை வழக்காக போலீசார் பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மயிலை போலீசார் விசாரணை நடத்தி வலைவீசி தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story