பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய வாலிபர் கைது


பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 10 Oct 2017 3:45 AM IST (Updated: 10 Oct 2017 2:39 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய வாலிபர் கைது

குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கோவில் பாளையம் அண்ணா நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் பாஸ்கர் (வயது 26). இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இவர் 21 வயது மதிக்கத்தக்க பெண்ணை 3 வருடம் காதலித்து அவ்வப்போது தனிமையில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த பெண் குன்னம் போலீஸ் நிலையத்தில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியத்திடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், பாஸ்கர் என்பவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி என்னை கர்ப்பமாக்கி விட்டார் என கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Tags :
Next Story