சந்தவாசல் பகுதியில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

கண்ணமங்கலம்,
கண்ணமங்கலத்தை அடுத்த சந்தவாசல் பகுதியில் திருவண்ணாமலை மெயின் ரோட்டில் மசூதி உள்ளது. மசூதிக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைத்திருந்தனர். இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி வக்பு வாரியம் மற்றும் முத்தவல்லி அன்வர் ஆகியோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். அதன்படி, கோர்ட்டு அமீனா சீனிவாசன், வக்பு வாரியம் ஆய்வாளர் அப்துல்லா, முத்தவல்லி அன்வர் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெரினா பேகம், இன்ஸ்பெக்டர்கள் ஜெயபிரகாஷ், சாலமன்ராஜா, முரளிசுந்தரம், சந்தவாசல் சப் - இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உள்பட 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் நேற்று காலை பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story