பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை தஞ்சை கலெக்டரிடம், விவசாயிகள் வலியுறுத்தல்
பயிர்க்காப்பீட்டுதொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தஞ்சை கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். கூட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக எழுதி கொடுத்தனர்.
தஞ்சையை அடுத்த ஆலக்குடி பகுதியை சேர்ந்த விவசாயிகள் அசோகன் தலைமையில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஆலக்குடி கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறோம். கடந்த 6 வருடமாக குறுவை சாகுபடியை இழந்து விட்டோம். கடந்த ஆண்டு காவிரி ஆற்று நீரை நம்பி சம்பா நடவு செய்தோம். தண்ணீர் இல்லாததால் சாகுபடி பாதிப்பு அடைந்தது. குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது.
எங்கள் கிராமத்தில் 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் பணம் செலுத்தி இருந்தோம். வறட்சியால் பயிர்கள் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து நிவாரணம் கோரி இருந்தோம். ஆனால் இதுவரை பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. கேட்டால் வங்கி கணக்கில் ஏறிவிடும். பணம் செலுத்திவிடுவோம் என்று பலமாதங்களாக கூறி வருகிறார்கள். தற்போது ஆற்றில் தண்ணீர் வந்துள்ளது. இந்த ஆண்டு விவசாயம் செய்ய தயார் நிலையில் உள்ளோம். ஆனால் பணம் இல்லாததால் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே எங்களுக்கு சேர வேண்டிய பயிர்க்காப்பீட்டு தொகையை உடனே வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இல்லையென்றால் நாங்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.
தஞ்சை மாவட்டம் ராயந்தூரை அடுத்த சித்தாயல் பகுதியைச் சேர்ந்த சுமார் 30-க்கும் அதிகமான பெண்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் மாலதி தலைமையில் வந்து மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
சித்தாயல் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் வசித்து வருகிறோம். ஆனால் இதுவரை வீட்டுமனை பட்டா இல்லை. இலவச பட்டா கேட்டு பல முறை மனு கொடுத்தும் பலன் இல்லை. அதே போல் நாங்கள் வசிக்கும் பகுதியில் ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டி பழுதடைந்து தண்ணீர் கீழே கொட்டுகிறது. இதனால் குடிப்பதற்கு தண்ணீர் கிடைப்பது கஷ்டமாக உள்ளது.
மின்சாரம் தடைபட்டால் எங்கள் பகுதிக்கு குடிப்பதற்கு தண்ணீரே கிடைக்காது. எனவே முதலில் ஒரு அடிபம்பு அமைத்து தர வேண்டும். ஒரே ஒரு தெரு விளக்கு தான் உள்ளது. அதுவும் எரிந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. தஞ்சையில் இருந்து சித்தாயல் பகுதிக்கு காலை, மாலை என்று இரண்டு நேரங்களில் தான் பஸ் வரும். அந்த பஸ் திடீரென வரவில்லை என்றால் மாற்று ஏற்பாடு கிடையாது. இதனால் தஞ்சைக்கு வரவேண்டும் அல்லது தஞ்சைக்கு வந்தவர்கள் எங்கள் ஊருக்கு வரவேண்டும் என்றால் சுமார் 5 கி.மீ தூரத்தில் உள்ள குணமங்கலம் பகுதிக்கு சென்று தான் பஸ் ஏற வேண்டும். இவ்வாறு அந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் நாங்கள் இந்த நவீன அறிவியல் யுகத்தில் வாழ்ந்து வருகிறோம். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு எங்கள் பகுதிக்கு உதவி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

Related Tags :
Next Story