அந்தேரி ரெயில் நிலையத்தில் பெண்ணை மானபங்கம் செய்தவர் பிடிபட்டார்


அந்தேரி ரெயில் நிலையத்தில் பெண்ணை மானபங்கம் செய்தவர் பிடிபட்டார்
x
தினத்தந்தி 10 Oct 2017 3:02 AM IST (Updated: 10 Oct 2017 3:02 AM IST)
t-max-icont-min-icon

அந்தேரி ரெயில் நிலையத்தில் பெண்ணை மானபங்கம் செய்தவர் கைது செய்யப்பட்டார்.

மும்பை, 

மும்பை அந்தேரியை சேர்ந்த 33 வயது பெண் ஒருவர் தகிசர் செல்வதற்காக சம்பவத்தன்று அந்தேரி ரெயில் நிலையத்திற்கு வந்தார்.

அவர் நடைமேம்பால படிக்கட்டில் இறங்கி கொண்டிருந்த போது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவருக்கு பின்னால் வந்த வாலிபர் ஒருவர் பெண்ணின் உடலில் தொடக்கூடாத இடத்தில் தொட்டு மானபங்கம் செய்து உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அந்த வாலிபரை நோக்கி சத்தம் போட்டார். அதன்பின்னரும் அந்த வாலிபர் அந்த பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து உள்ளார்.

வாலிபர் கைது

இதனால் கோபம் அடைந்த பெண் உதவி கேட்டு சத்தம் போட்டார். இதையடுத்து மற்ற பயணிகள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அந்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். விசாரணையில் பிடிபட்டவர் லால்பாக் பகுதியை சேர்ந்த ஜிகர்வோரா (வயது32) என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story