போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியவர் கைது
தாராவி சாகுநகர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
மும்பை தாராவி சாகுநகரை சேர்ந்தவர் ஆனந்த் பன்சால். இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. சம்பவத்தன்று குடித்து விட்டு வந்து மனைவியிடம் சண்டையிட்டார். மேலும் மனைவியை பிடித்து அடித்து உதைத்து உள்ளார். இதனால் கோபம் அடைந்த அந்த பெண் சாகுநகர் போலீசில் ஆனந்த் பன்சால் மீது புகார் கொடுத்தார்.
போலீசார் அவரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு பிடித்து வந்தனர்.
சப்-இன்ஸ்பெக்டரை தாக்கினார்
அப்போது விசாரணை நடத்தி கொண்டிருந்த போது அவர் போலீசாரையும் தகாத வார்த்தைகளால் திட்டி னார். அப்போது போலீஸ்காரர் ஒருவர் அவரை அமைதிப்படுத்த முயன்றார். அவரை ஆனந்த் பன்சால் வேகமாக தள்ளி விட்டார். உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுவப்னில் சவான் வந்து தடுக்க முயன்றார்.
அப்போது ஆனந்த் பன்சால் அவரது சீருடை காலரை பிடித்து சரமாரியாக தாக்கி உள்ளார்.
பலமாக குத்தியதில் சப்-இன்ஸ்பெக்டர் சுவப்னில் சவான் முகத்தில் காயம் ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற போலீசார் அவரை பிடித்து கொண்டனர்.
பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். போலீசார் அவர் மீது அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story