வெளிநாட்டு பணம் தருவதாக ஆட்டோ டிரைவரிடம் ரூ.1 லட்சம் மோசடி 2 பேருக்கு வலைவீச்சு


வெளிநாட்டு பணம் தருவதாக ஆட்டோ டிரைவரிடம் ரூ.1 லட்சம் மோசடி 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 10 Oct 2017 3:20 AM IST (Updated: 10 Oct 2017 3:19 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டு பணம் தருவதாக ஆட்டோ டிரைவரிடம் நூதன முறையில் ரூ.1 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

புனே, 

புனே, கோந்த்வா பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் முஸ்தபா (வயது 40). சம்பவத்தன்று இவரது ஆட்டோவில் பயணி ஒருவர் கோந்த்வாவில் இருந்து புனே ரெயில் நிலையத்திற்கு சென்றார். பயணத்தின் போது ஆட்டோவில் வந்தவர் தன்னிடம் அதிகளவு வெளிநாட்டு பணம் இருப்பதாக தெரிவித்தார். இந்திய பணம் கொடுத்தால் அதிக அளவு வெளிநாட்டு பணம் தருவதாக கூறினார். மேலும் ஆட்டோ டிரைவரிடம் ஒரு வெளிநாட்டு பண நோட்டை கொடுத்தார். ஆட்டோ டிரைவர் அந்த வெளிநாட்டு பணம் குறித்து வெளியே விசாரித்தார். அப்போது அதன் இந்திய மதிப்பு ரூ.1,280 என்பது தெரியவந்தது.

ரூ.1 லட்சம் மோசடி

இதையடுத்து ஆட்டோ டிரைவர் அந்த பயணியிடம் இந்திய பணம் கொடுத்து அதிக வெளிநாட்டு பணத்தை வாங்க விரும்பினார். இதற்காக அவர் ரூ.1 லட்சம் கடன் வாங்கினார். பின்னர் இதுகுறித்து ஆட்டோவில் வந்த பயணியை தொடர்பு கொண்டு கூறினார். அவர் பணத்துடன் ஹடப்சர் மார்க்கெட் பகுதிக்கு வருமாறு கூறினார். அங்கு ஆட்டோ டிரைவரை சந்திக்க அந்த பயணி மேலும் ஒருவருடன் வந்தார். அவர் ஆட்டோ டிரைவரிடம் இருந்து ரூ.1 லட்சத்தை வாங்கினார். மேலும் ஆயிரம் வெளிநாட்டு பண நோட்டுகள் இருப்பதாக கூறி ஒரு பார்சலை கொடுத்துவிட்டு அங்கு இருந்து மாயமானார்.

இந்தநிலையில் ஆட்டோ டிரைவர் அந்த நபர் கொடுத்து சென்ற பார்சலை திறந்து பார்த்தார். அப்போது அதற்குள் பண வடிவில் வெள்ளை காகிதங்கள் இருந்தது. அதிர்ச்சி அடைந்த ஆட்டோ டிரைவர் இதுகுறித்து ஹடப்சர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் ஆட்டோ டிரைவரிடம் மோசடியில் ஈடுபட்டவரை தேடி வருகின்றனர். 

Next Story