கோவையில் லாரி பள்ளத்தில் சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு
கோவை பீளமேடு காந்திமாநகர் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதால்,
கோவை,
பீளமேடு ரெயில் நிலையத்தில் இருந்து இரும்பு கம்பிகளை ஏற்றி வரும் சரக்கு லாரிகள் முருகன் நகர் குடியிருப்பு பகுதி வழியாக சென்று வருகின்றன. குடியிருப்பு பகுதிக்குள் லாரிகள் செல்ல தடைவிதிக்க வேண்டும் என்று கோரி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். கருப்புக்கொடிகளை வீடுகள் தோறும் ஏற்றியும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று மாலை 5.30 மணியளவில் இரும்பு பாரம் ஏற்றிச்சென்ற லாரி, முருகன் நகர் அருகே உள்ள நேதாஜி நகரில் சாலை பள்ளத்தில் சிக்கியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
லாரி பள்ளத்தில் சிக்கியதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். ‘குடியிருப்புகள் நிறைந்த இந்த பகுதியில் லாரி போக்குவரத்துக்கு தடைவிதிக்கும்வரை இங்கிருந்து கலைந்து செல்ல மாட்டோம்’ என்று கூறினார்கள்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் பீளமேடு இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். நீண்டநேர போராட்டத்துக்கு பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story