திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் போக்குவரத்து மாற்றம்; வியாபாரிகள் சாலை மறியல்
திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் போக்குவரத்து மாற்றம் செய்ததால் வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்,
திருப்பூர் பழைய பஸ் நிலையம் முன் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பழைய பஸ் நிலையம் தற்காலிகமாக மாநகராட்சி முன்பு, வீரராகவ பெருமாள் கோவில் பின்புறம் மற்றும் அரசு ஆஸ்பத்திரி புற நோயாளிகள் பிரிவு அருகில் 3 இடங்களில் செயல்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி அலுவலகம் முன் இருந்த தற்காலிக பஸ் நிறுத்தம், மீண்டும் பழைய பஸ் நிலையத்திற்குள் மாற்றப்பட்டது.
இந்த நிலையில் வீரராகவ பெருமாள் கோவில் பின்புறம் இருந்து சேலம், ஈரோடு போன்ற ஊர்களுக்கு செல்லும் தற்காலிக பஸ் நிறுத்தமும் நேற்று பழைய பஸ் நிலையத்திற்குள் மாற்றப்பட்டது. இந்த மார்க்கமாக செல்லும் பஸ்கள் பழைய பஸ் நிலையத்தில் இருந்து வெளியேறி புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தின் அடியில் உள்ள சாலையின் வழியாக இடதுபுறமாக சென்று, மாநகராட்சி அலுவலகம், எம்.ஜி.ஆர். சிலை வழியாக அந்தந்த பகுதிகளுக்கு செல்லும் வகையில் மாநகர போலீஸ் சார்பில் போக்குவரத்து மாற்றப்பட்டது.
இதற்காக வீரராகவ பெருமாள் கோவில் பின்புறம் உள்ள காமராஜர் சாலையில் இருந்து பழைய பஸ் நிலையம் வழியாக பல்லடம் ரோடு செல்லும் வாகனங்கள் செல்லக் கூடாது என தடைவிதிக்கப்பட்டது.
இவ்வாறு எதிர்திசையில் வாகனங்கள் இயக்கப்படுவதாலும், பழைய பஸ் நிலையம் வழியாக செல்லும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டதாலும் தங்களுக்கு வியாபாரம் பாதிப்பு ஏற்படுவதாக கூறி, பழைய பஸ் நிலையம் முன் அப்பகுதியை சேர்ந்த கடை வியாபாரிகள் நேற்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். வியாபாரம் பாதிக்காத வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். பார்க்கிங் வசதிகள் கூடுதலாக செய்யப்படும் என்று போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து வியாபாரிகள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story