2-வது நாளாக லாரிகள் வேலை நிறுத்த போராட்டம்: ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு


2-வது நாளாக லாரிகள் வேலை நிறுத்த போராட்டம்: ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு
x
தினத்தந்தி 11 Oct 2017 5:53 AM IST (Updated: 11 Oct 2017 5:53 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்றும் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் நடந்ததால் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

ஈரோடு,

சரக்கு மற்றும் சேவை வரி, டீசல் விலை உயர்வு, மோட்டார் வாகன பாதுகாப்பு சட்டம் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 2-வது நாளாக நேற்றும் போராட்டம் நடந்தது.

இதனால் லாரிகள் ஓடவில்லை. ஈரோடு மாவட்டத்திலும் நேற்று லாரிகள் ஓடவில்லை. நரிப்பள்ளம் லாரி நிறுத்தம், குப்பை மேடு உள்ளிட்ட பகுதிகளில் லாரிகள் நிறுத்தப்பட்டு இருந்தன. லாரி நிறுத்தங்களில் 2 நாட்களாக காத்திருந்த டிரைவர்கள் மற்றும் கிளனர்கள் நேற்று அவர்களே சமைத்து சாப்பிட்டனர்.

போராட்டம் குறித்து லாரி உரிமையாளர்கள் கூறும்போது, ‘ஈரோடு மாவட்டத்தில் 5 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை’ என்றார்கள்.

நேற்று சுமார் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது. 2 நாட்களும் சேர்த்து ரூ.200 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

லாரி வேலை நிறுத்தத்தால் ஈரோட்டில் இருந்து வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய ஜவுளி, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் குடோன்களிலேயே தேங்கின. தீபாவளி நேரத்தில் பொருட் கள் தேங்குவதால் பெருத்த அளவில் விற்பனை பாதிப்பு ஏற்படுகிறது என்று உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். இதுபோல் வெளியூர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஈரோட்டுக்கும் சரக்கு கள் வராததால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 

Next Story