13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்


13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Oct 2017 12:28 AM GMT (Updated: 11 Oct 2017 12:28 AM GMT)

13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே திருவள்ளூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் கேசவன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சந்திரன், மாவட்ட துணை செயலாளர் நித்யானந்தன், மாவட்ட துணைத்தலைவர் பாலகுமார், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் , டாஸ்மாக் மாநில துணை செயலாளர் ராமு ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

இதில் 300-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் கலந்து கொண்டு டாஸ்மாக் ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக பணி வழங்க கோரியும், காலமுறை ஊதியத்துடன் மாற்றுப்பணி வழங்கக்கோரியும், அனைத்து டாஸ்மாக் கடைகளையும் பணிவரன் முறைப்படுத்தி காலமுறை ஊதியம், வாரவிடுமுறை, பணிப்பதிவேடு, நிலையான விதிகள், தமிழகத்தில் திருட்டுத்தனமாக மது விற்பனை செய்யும் மதுக்கூட உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், டாஸ்மாக் பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

முடிவில் சங்கர் நன்றி கூறினார். 

Next Story