கனமழை: தார்சாலை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிப்பு
சித்தேரி பகுதியில் பெய்த கனமழையால் தார்சாலை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் 63 மலைகிராமமக்கள் அவதிக்குள்ளாகினர்.
அரூர்,
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ளது சித்தேரி ஊராட்சி. இந்த பகுதியில் 63 மலை கிராமங்கள் உள்ளன. இங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு அரூர் பஸ் நிலையத்தில் இருந்து 3 அரசு பஸ்களும், ஒரு தனியார் பஸ்சும் சென்று வருகின்றன. நேற்று முன்தினம் மாலை சித்தேரி மலைப்பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.
சித்தேரி மலைப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழையால் மாமரத்துப்பள்ளம் பகுதியில் இருந்து மரங்கள், செடி, கொடிகள் அடித்து வரப்பட்டு தரைப்பாலத்தில் அடைத்து கொண்டது. இதனால் மழைநீர் வெளியேற வழியில்லாமல் தார்சாலை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. மேலும் ஆங்காங்கே மலைப்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தது. இதனால் கிராமங்களில் தார்சாலைகள் சேதமடைந்தது.
கிராமமக்கள் அவதி
இதன் காரணமாக பஸ்கள் செல்ல முடியாததால் மலைப்பகுதிக்கு சென்ற ஒரு அரசு பஸ் அங்கேயே நிறுத்தப்பட்டது. மேலும் 3 பஸ்கள் மலைப்பகுதிக்கு இயக்கப்படவில்லை. கனமழையால் சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் நேற்று காலை மலை கிராமமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகினர். ஒரு சிலர் இருசக்கர வாகனங்களில் சென்று வந்தனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் சாலையில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் பாறைகளை அகற்றி சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் மழைநீரில் அடித்து செல்லப்பட்ட தார்சாலையை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைப்பணியாளர்கள் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story