குமரியை சேர்ந்த லாரி அதிபர் கொலையில் கைதான 2 பேர் பரபரப்பு வாக்குமூலம்
பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த லாரி அதிபரை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்து விட்டதாக கைதான டிரைவர்கள் 2 பேர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே ஆண்டிமடம்-காடுவெட்டி ரோடு திருகளப்பூர் கிராம சுடுகாடு அருகே கடந்த 7-ந்தேதி நின்று கொண்டிருந்த லாரியில் கொலை செய்யப்பட்ட நிலையில் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அந்த லாரியில் இருந்த ஆர்.சி. புத்தகத்தை வைத்து ஆண்டிமடம் போலீசார் விசாரணை நடத்திய போது, கொலை செய்யப்பட்ட கிடந்த நபர் கன்னியாகுமரி மாவட்டம் காப்புக்காடு விளாத்திவிளை கிராமத்தை சேர்ந்த கிளாட்வின் (வயது 37) என்பதும், அவர் லாரியின் உரிமையாளர் என்பதும் தெரிய வந்தது.
ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த கிளாட்வினின் உடலை அவரது உறவினர்கள் அடையாளம் காண்பித்தனர்.
மேலும் தற்காலிக டிரைவர்களை நியமித்து லாரியில் மணல் அள்ளி விற்கும் தொழிலை கிளாட்வின் செய்து வந்தார் என உறவினர்கள் போலீசில் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் கிளாட்வினிடம் வேலை பார்த்த தற்காலிக லாரி டிரைவர்கள் தான் அவரை கொலை செய்திருக்க வேண்டும் என போலீசார் கருதினர்.
டிரைவர்கள் 2 பேர் கைது
ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி தலைமையில் ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடினர். இந்த நிலையில் கன்னியாகுமரிக்கு விரைந்த தனிப்படை போலீசார் கிளாட்வினின் தொழில்முறை நண்பர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது கடந்த 4 மாதங்களாக கிளாட்வினிடம் லாரி டிரைவராக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காமராஜர்புரத்தை சேர்ந்த சிவக்குமார் (39), தேவாமங்களத்தை சேர்ந்த செல்வம் (35) ஆகிய 2 பேர் வேலை செய்தது போலீசுக்கு தெரிய வந்தது. இதையடுத்து ஜெயங்கொண்டத்திற்கு வீட்டிலிருந்த லாரி டிரைவர் சிவக்குமாரை பிடித்து விசாரித்தனர். அப்போது முன்னுக்கு பின் முரணாக அவர் பதில் தெரிவித்தார். பின்னர் லாரி உரிமையாளர் கிளாட்வினை பணத்துக்கு ஆசைப்பட்டு குடிபோதையில் இரும்பு கம்பியால் அடித்து செல்வத்துடன் சேர்ந்து தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
பணத்தை கொள்ளையடிக்க திட்டம்
இதையடுத்து கிளாட்வினின் கொலை வழக்கில் தொடர்புடைய லாரி டிரைவர்கள் சிவக்குமார், செல்வம் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கிளாட்வினை கொலை செய்தது குறித்து சிவக்குமார் போலீசில் அளித்த பரபரப்பு வாக்கு மூலம் வருமாறு:-
கிளாட்வினிடம் நான் தற்காலிக லாரி டிரைவராக வேலை செய்தேன். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் கூடலையாத்தூர் வெள்ளாற்றில் மணல் அள்ளுவதற்காக கடந்த 6-ந்தேதி ஆண்டிமடம் பகுதிக்கு லாரியில் வந்தேன். அப்போது கிளாட்வினிடம் இருந்த பணத்தை கொள்ளையடித்து லாரியை கடத்தி செல்ல திட்டம் தீட்டினேன். மேலும் போலீசில் மாட்டிவிடக்கூடாது என்பதற்காக நண்பர் செல்வத்துடன் சேர்ந்து கிளாட்வினை கொலை செய்ய முடிவு செய்தேன். அதன்படி தான் வேறு வேலைக்கு செல்ல போகிறேன் என கிளாட்வினிடம் கூறி, மாற்று டிரைவராக செல்வத்தை வைத்து கொள்ளுங்கள் என்றேன்.
சிறையில் அடைப்பு
பின்னர் செல்வம், கிளாட்வினுடன் சேர்ந்து நாங்கள் 3 பேரும் லாரியில் அன்று இரவு மது அருந்தினோம். பின்னர் செல்வமும், நானும் சேர்ந்து கிளாட்வினை இரும்பு கம்பியால் (லிவர்) அடித்து கொலை செய்தோம். பின்னர் கிளாட்வின் பணத்தை எங்கு வைத்திருக்கிறார் என தேடினோம். ஆனால் பணத்தை எடுக்க முடியவில்லை. இதற்கிடையே திருகளப்பூர் அருகே லாரி நின்று விட்டதால் சிறிது அச்சமடைந்தோம். இதனால் போலீசில் மாட்டிவிடக்கூடாது என்பதற்காக லாரியை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பிவிட்டோம். எனினும் போலீசார் விசாரணை நடத்தி எங்களை பிடித்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து போலீசார் லாரி டிரைவர்கள் சிவக்குமார், செல்வம் ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story