தாதரில் மின்சார ரெயிலில் பெண்ணுக்கு பிரசவம் பெண் குழந்தை பிறந்தது


தாதரில் மின்சார ரெயிலில் பெண்ணுக்கு பிரசவம் பெண் குழந்தை பிறந்தது
x
தினத்தந்தி 11 Oct 2017 1:41 PM IST (Updated: 11 Oct 2017 1:41 PM IST)
t-max-icont-min-icon

தாதர் ரெயில் நிலையத்தில், மின்சார ரெயிலில் பெண்ணுக்கு பிரசவம் ஆனது. அவர் பெண் குழந்தை பெற்றெடுத்தார்.

மும்பை,

மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் உள்ள கல்யாண் ரெயில் நிலையத்தில் இருந்து மும்பை சி.எஸ்.எம்.டி. நோக்கி நேற்றுமுன்தினம் இரவு 10.15 மணியளவில் மின்சார ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது.
அந்த ரெயிலின் ஒரு பெட்டியில் நிறைமாத கர்ப்பிணியான சல்மா சேக் (வயது26) என்பவர் பயணம் செய்து கொண்டிருந்தார். ரெயில் மாட்டுங்காவை கடந்து தாதர் நோக்கி வந்து கொண்டிருந்த போது அந்த பெண்ணுக்கு பிரசவவலி உண்டானது. அவர் வலியில் துடித்தார்.
ரெயில் தாதர் ரெயில் நிலையம் வந்ததும் இதுபற்றி கார்டுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த ரெயில் மூன்றாம் எண் பிளாட்பாரத்தில் நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்ததும் தாதர் ரெயில் நிலையத்தில் உள்ள ஒரு ரூபாய் கிளினிக்கில் பணிபுரியும் டாக்டர் ஒருவர் விரைந்து வந்து அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார். ரெயிலில் அந்த பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து தாய், சேய் இருவரும் சிகிச்சைக்காக பரேல் கே.இ.எம். மாநகராட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தாய், சேய் இருவரும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Next Story