அங்கன்வாடி மையத்திற்கு பூட்டுப்போட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


அங்கன்வாடி மையத்திற்கு பூட்டுப்போட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Oct 2017 4:30 AM IST (Updated: 11 Oct 2017 6:28 PM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதிலும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் காலி பணியிடங்களுக்கான நேர்காணல் நடந்து பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அடுக்கம்பாறை,

தமிழகம் முழுவதிலும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் காலி பணியிடங்களுக்கான நேர்காணல் நடந்து பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வேலூரை அடுத்த பாலமதி மலை கிராமத்தில் அங்கன்வாடி மையத்துக்கு விதிமுறைப்படி உள்ளூர் ஆட்களுக்கு முன்னுரிமை வழங்காமல் வெளியூர் ஆட்களை நியமித்ததாக கூறப்படுகிறது. இதற்கு அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் கிராமத்தை சேர்ந்த 200–க்கும் மேற்பட்டோர் பாலமதி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு பூட்டுப்போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தகுதியுடையவர்கள் இந்த கிராமத்தில் இருந்து பலர் விண்ணப்பித்திருந்தும் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை. இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே நியமனம் செய்யவேண்டும் என கோ‌ஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story