செங்கத்தில் குண்டும் குழியுமாக மாறிய பஸ் நிலையம்


செங்கத்தில் குண்டும் குழியுமாக மாறிய பஸ் நிலையம்
x
தினத்தந்தி 11 Oct 2017 11:00 PM GMT (Updated: 11 Oct 2017 2:40 PM GMT)

செங்கம் பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். பஸ் நிலையம் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

செங்கம்,

செங்கம் பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். பஸ் நிலையம் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. தற்போது பெய்த மழையின் காரணமாக பள்ளங்களில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி பேரூராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் பலமுறை மனு அளித்துள்ளனர். எனினும் பேரூராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. பள்ளங்களில் மழைநீர் தேங்கி காணப்படுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. பயணிகள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தேங்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தி ஆகிறது. இதனால் மர்ம காய்ச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பள்ளங்களை சரிசெய்து மழைநீர் தேங்காமல் பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story