டெங்கு காய்ச்சலுக்கு பொள்ளாச்சி பள்ளி மாணவன் உள்பட 7 பேர் பலி
டெங்கு காய்ச்சலுக்கு பொள்ளாச்சி பள்ளி மாணவன் உள்பட 7 பேர் பரிதாபமாக இறந்தனர். இதேபோல் மர்ம காய்ச்சலுக்கு வடமாநில பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி-உடுமலை சாலையில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் பாதிரியார் ஸ்டீபன்ராஜ். இவருடைய மனைவி தேன்மொழி. இவர் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில், மூத்த மகன் ஜெர்வின் டிக்சன் (வயது 12). இவர் பொள்ளாச்சி ஜோதி நகரில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் கடந்த வாரம் ஸ்டீபன்ராஜ், தனது மகன் ஜெர்வின் டிக்சனை அழைத்துக் கொண்டு சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு கடந்த கடந்த 2 நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சிக்கு வந்தார். இதற்கிடையில் ஜெர்வின்டிக்சனுக்கு காய்ச்சல் விட்டு விட்டு வந்துள்ளது.
டெங்கு காய்ச்சல்
எனவே அவரை நேற்று முன்தினம் தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். டாக்டர்கள் ஜெர்சின் டிக்சனை பரிசோதனை செய்து விட்டு, டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதாகவும், உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக தெரிவித்தனர்.
இதையடுத்து மேல்சிகிச்சைக்காக கோவை அவினாசி ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஜெர்வின் டிக்சன் பரிதாபமாக இறந்தான். பொள்ளாச்சி பள்ளி மாணவன் டெங்கு காய்ச்சலுக்கு பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பள்ளி மாணவன்
சென்னை புளியந்தோப்பு ராஜா தோட்டம் தெருவை சேர்ந்தவர் தணிகைராஜ். கூலித் தொழிலாளி. இவருடைய மகன் சச்சின் (வயது 9). இவன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். சச்சினுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவனை பெற்றோர் எழும்புரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சச்சின் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான்.
ராமநாதபுரம் பட்டணம்காத்தான் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உணவகம் நடத்தி வருபவர் பாலமுருகன் (35). இவருடைய மகன் அஜித்குமார் (12). இவன் அப்பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் படித்து வந்தான். சிறுவன் அஜித்குமாருக்கு கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்து வந்தது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த சிறுவனுக்கு உடல்நிலை கவலைக்கிடமானதை தொடர்ந்து ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் அஜித்குமார் பரிதாபமாக இறந்து போனான்.
கோவில் பூசாரி
நாகர்கோவில் வடிவீஸ்வரம் நடராஜபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் (35). குறுந்தெருவில் உள்ள அடைக்கலம் சாஸ்தா கோவிலில் பூசாரியாக இருந்தார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கண்ணனை அவரது உறவினர்கள் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலையில் கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.
பொங்கலூர் அருகே உள்ள மஞ்சப்பூரை சேர்ந்தவர் செல்வராஜ் (44). திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் சண்முகப்பிரியா(11). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சண்முகப்பிரியா திருப்பூர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சண்முகப்பிரியா, சிகிச் சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
மாணவி
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள பைசுஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. . இவருடைய மகள் காயத்ரி (16). இவர் கோணங்கிநாயக்கனஅள்ளியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
மர்ம காய்ச்சல்
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் நெ.3 கொமாரபாளையம் கோம்பைகாடு பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மனைவி மாலதி. இவர்கள் கட்டிட கம்பி கட்டும் தொழில் மற்றும் விவசாய கூலிவேலை செய்து வந்தனர். இவர்களுக்கு 1½ வயதில் தனுஷ் என்ற ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை திடீரென குழந்தைக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட குழந்தை தனுஷ் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தது.
பள்ளிபாளையம் பெரியார் நகரை சேர்ந்தவர் வேலு. தள்ளுவண்டியில் பலகாரம் விற்பனை செய்து வந்தார். இவரது மகன் வாகீஸ்வரன் (6). இவன் 1-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வாகீஸ்வரன் மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தான். பள்ளிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.இதையடுத்து ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி வாகீஸ்வரன் நேற்று முன்தினம் இரவு இறந்து போனான்.
கோவை அரசு ஆஸ்பத்திரி
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் லாபு. இவருடைய மகள் பூர்ணிமாராம் (வயது 22). திருமணமாக வில்லை. இவர் திருப்பூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். இவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு லேசான காய்ச்சல் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரின் ரத்த மாதிரியை பரிசோதனை செய்த டாக்டர்கள் மர்ம காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக தெரிவித்தனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் அவரை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை சிறப்பு வார்டில் வைத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பூர்ணிமா ராம் நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் ஒடிசாவில் இருந்து பூர்ணிமாராமின் பெற்றோர் கோவை அரசு ஆஸ்பத்திரி வந்து உடலை வாங்கி சென்றனர்.
இதேபோல் ராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதியை சேர்ந்த ஏக்நாத் என்பவரின் மகள் ஹர்சவர்த்தினி (11) என்பவர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தடகள இளம் வீராங்கனையான மாணவி ஹர்சவர்த்தினி மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story