டாஸ்மாக் கடையை மூடக்கோரி மாவட்ட கலெக்டரிடம் ரேஷன் கார்டை ஒப்படைக்கும் போராட்டம்
நஞ்சைஊத்துக்குளியில் அமைக்கப்பட்டு உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி மாவட்ட கலெக்டரிடம் ரேஷன் கார்டை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்போவதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர்.
மொடக்குறிச்சி,
மொடக்குறிச்சியை அடுத்த நஞ்சைஊத்துக்குளி பூலக்காட்டுநகர் பகுதியில் பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டு திறக்கப்பட்டு உள்ளது. இங்கு தினமும் ஏராளமான மதுபிரியர்கள் வந்து மதுபாட்டில்களை வாங்கிச்செல்வதுடன், மதுகுடித்துவிட்டு பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனால் பெண்கள், மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகிறார்கள். இந்தநிலையில், டாஸ்மாக் கடைக்கு எதிரே செல்லும் சாலையில் 4 வேகத்தடைகளை டாஸ்மாக் கடை ஊழியர்கள் எந்த விதிமுறைகளுமின்றி தன்னிச்சையாக அமைத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
வேகத்தடைகள்
நஞ்சைஊத்துக்குளி பூலக்காட்டுநகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். சாவடிப்பாளையம்புதூர் செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றபோது, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடை முன்பு முற்றுகை மற்றும் நஞ்சைஊத்துக்குளியில் சாலைமறியல் செய்தோம்.
ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. தற்போது டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு மதுபானங்கள் எந்தவித தடையுமின்றி விற்கப்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடை எதிரே செல்லும் சாலையில் 4 இடங்களில் உயரமான வேகத்தடைகளை டாஸ்மாக் ஊழியர்கள் அமைத்துள்ளனர். நெடுஞ்சாலைதுறை உள்ளதா? என்றே தெரியவில்லை.
தொடர் போராட்டம்
இந்த வேகத்தடைகளால் வேலைக்கு சென்றுவிட்டு வாகனங்களில் வீடு திரும்பும்போது, குடிமகன்கள் வண்டியை மடக்கி ‘லிப்ட்’ கேட்டு ஏறிக்கொள்கின்றனர். மறுப்பவர்களின் வாகனங்களை கீழே தள்ளிவிடுகின்றனர். மேலும் தகாத வார்த்தைகளில் பேசுகிறார்கள்.
இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். மேலும் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. எனவே வேகத்தடை அமைத்தவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுத்து உடனடியாக அகற்ற வேண்டும். டாஸ்மாக் கடை மற்றும் பார்களை உடனே மூடவேண்டும். இல்லை எனில் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க முடிவு செய்து உள்ளோம். மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Tags :
Next Story