செம்பட்டி, நிலக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


செம்பட்டி, நிலக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Oct 2017 3:45 AM IST (Updated: 12 Oct 2017 2:00 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷாவின் மகன் தனது நிறுவனத்தின் முறைகேடாக வருமானம் பெற்றதையும், அந்த ஊழலுக்கு துணை போகும் மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நிலக்கோட்டை,

செம்பட்டியில் உள்ள ஆத்தூர் ஒன்றிய அலுவலகம் முன்பு, வட்டார காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், பா.ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷாவின் மகன் தனது நிறுவனத்தின் முறைகேடாக வருமானம் பெற்றதையும், அந்த ஊழலுக்கு துணை போகும் மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஆத்தூர் வட்டார தலைவர்கள் செல்வராஜ் (மேற்கு), தெய்வம் (கிழக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாவட்ட துணைத்தலைவர் சதீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல், நிலக்கோட்டையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு நகர தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் கோகுல்நாத் சிறப்புரை ஆற்றினார். இதில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story