முத்துப்பேட்டை அருகே பரபரப்பு: டெங்கு பாதித்த சிறுமிக்கு சிகிச்சை அளிக்க தாமதம்


முத்துப்பேட்டை அருகே பரபரப்பு: டெங்கு பாதித்த சிறுமிக்கு சிகிச்சை அளிக்க தாமதம்
x
தினத்தந்தி 12 Oct 2017 4:15 AM IST (Updated: 12 Oct 2017 3:31 AM IST)
t-max-icont-min-icon

7 மணிநேரமாக ஆம்புலன்ஸ் வராததால் டெங்கு பாதித்த சிறுமிக்கு சிகிச்சை அளிக்க தாமதம் ஆனதால் பெற்றோர் தவித்தனர். இதனால் முத்துப்பேட்டை அருகே பரபரப்பு ஏற்பட்டது.

முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட மருதங்காவெளியை சேர்ந்தவர் தென்றல். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சீத்தாதேவி. இவர்களுக்கு பிரித்திகா (வயது7), முகேஷ் (5) என 2 குழந்தைகள் உள்ளனர். இதில் பிரித்திகா அதேபகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று பிரித்திகா திடீரென கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். உடனடியாக அவரது தாய் சீத்தாதேவி முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சிறுமி பிரித்திகாவுக்கு டெங்கு பாதிப்பு இருப்பதை உறுதிசெய்த டாக்டர்கள் உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

பரபரப்பு

இதனால் திருவாருரூக்கு விரைவாக செல்ல மருத்துவமனை சார்பில் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மாலை வரை ஆம்புலன்ஸ் வரவில்லை. மேலும் 7 மணி நேரத்துக்கு மேல் காத்திருந்ததால் சிறுமியின் உடல்நிலை மேலும் பாதிப்படைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் சீத்தாதேவி 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து சீக்கிரம் வரும்படி கூறினார். ஆனால் இரவு வரை ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால் சிறுமியின் பெற்றோரும், உறவினர்களும் மருத்துவமனை முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே சிறுமியின் வறுமை நிலையை அறிந்த சிலர் தனியார் ஆம்புலன்சை வரவழைத்தனர்.

இதை தொடர்ந்து சிறுமி பிரித்திகாவை திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமிக்கு சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Related Tags :
Next Story