சாலைபாதுகாப்பு மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்


சாலைபாதுகாப்பு மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Oct 2017 4:15 AM IST (Updated: 12 Oct 2017 3:31 AM IST)
t-max-icont-min-icon

சாலை பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி திருவாரூரில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவாரூர்,

மோட்டார் வாகனச் சட்டத்திருத்தம் அடுத்தமாதம்(நவம்பர்) நடைபெற உள்ள பாராளுமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ளது. மத்திய அரசு கொண்டு வரும் மோட்டார் வாகன சட்ட திருத்தங்கள் காரணமாக ஆட்டோ, டாக்சி, வாகன பழுது பார்க்கும் பட்டறைகள், ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் கடுமையாக பாதிக்கப்படும். மேலும் மோட்டார் சார்ந்த தொழில்கள் அனைத்தையும் கார்ப்பரேட் முதலாளிகளிடம் தாரை வார்்க்க உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்தநிலையில் சாலை பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி திருவாரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந் தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். இதில் செயலாளர் அறிவொளி, துணைத்தலைவர் ரவி, மோட்டார் வாகன தொழில் பாதுகாப்பு கூட்டமைப்பு நிர்வாகி அனிபா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story