வீடு புகுந்து பெண்ணிடம் 7 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
வாங்கல் அருகே வீடு புகுந்து பெண்ணிடம் 7 பவுன் தாலி சங்கிலியை பறித்து விட்டு, மற்றொருவரை மண்வெட்டியால் வெட்டி நகை பறிக்க முயன்ற மர்மநபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கரூர்,
கரூர் அருகே வாங்கல் அருகே உள்ள மாரிக்கவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவர் தனியார் கூரியர் நிறுவன பார்சல்களை வேன்களில் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
ஜெகநாதனின் மனைவி பிரீத்தா (வயது24). நேற்று முன்தினம் இரவு பிரீத்தாவும், அவரது மாமியார் லட்சுமியும் (65) வீட்டில் இருந்தனர். அப்போது இவர்களது வீட்டிற்கு அதே பகுதியில் வசிக்கும் ரேவதி (37) வந்தார். அப்போது 3 பேரும் சேர்ந்து டி.வி. பார்த்துக்கொண்டிருந்தனர்.
7 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
அப்போது மர்மநபர்கள் 2 பேர் திடீரென பிரீத்தாவின் வீட்டிற்குள் புகுந்தனர். மேலும் பிரீத்தாவின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலி சங்கிலியை பறித்தனர். தொடர்ந்து ரேவதியின் கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றனர். இதில் சுதாரித்துக்கொண்ட அவர் சங்கிலியை இறுகப்பிடித்துக்கொண்டு திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். இதனால் மர்மநபர்களால் சங்கிலியை பறிக்க முடியவில்லை. அப்போது மர்ம நபர்கள் ஆத்திரத்தில் வீட்டில் கிடந்த மண்வெட்டியை எடுத்து ரேவதியின் தலையில் வெட்டினர். இருப்பினும் சங்கிலியை அவர் இறுகப்பிடித்துக்கொண்டு தொடர்ந்து சத்தம் போட்டார். இதனால் மர்ம நபர்கள் 2 பேரும் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதில் ரேவதியின் கழுத்தில் கிடந்த சங்கிலி தப்பியது. பிரீத்தாவின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலிச்சங்கிலி மட்டும் பறிபோனது. மர்ம நபர்கள் மண் வெட்டியால் வெட்டியதில் ரேவதியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை பார்த்து லட்சுமி அதிர்ச்சியடைந்தார்.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
இதற்கிடையில் ரேவதியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வாங்கல் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். காயமடைந்த ரேவதி முதல் உதவி சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் குறித்து வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். வீடு புகுந்து மர்மநபர்கள் தங்கச்சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story