தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அடையார்குளத்தை மாணவ-மாணவிகள் சுத்தம் செய்தனர்
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஆவுடையார்கோவில் அடையார்குளத்தை மாணவ-மாணவிகள் சுத்தம் செய்தனர்.
ஆவுடையார்கோவில்,
அறந்தாங்கி பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிக்கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள் ஆவுடையார்கோவிலில் உள்ள அடியார்குளத்தை பிரதம மந்திரியின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதில் குளத்தில் இருந்த முட்செடிகளையும், பிளாஸ்டிக் பொருட்களையும் அகற்றி சுத்தம் செய்தனர். இதனை கல்லூரியின் முதல்வர் வீரப்பன், கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் சரவணன், பேராசிரியர்கள் மேற்பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் ஜீவரெத்தினம் செய்திருந்தார்.
சித்தன்னவாசல் சுற்றுலா தலம்
அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தில் தூய்மையே சேவை குறித்த முகாம் நடைபெற்றது. முகாமில் புதுக்கோட்டை மன்னர் கல்லூரி நாட்டு நலபணித் திட்ட மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தில் உள்ள ஏழடிப்பட்டம், முத்தமிழ் பூங்கா, அறிவியல் பூங்கா மற்றும் படகு குழாம் பகுதிகளில் இருந்த குப்பைகளை அகற்றினர்.
முன்னதாாக புதுக்கோட்டை சுற்றுலா அலுவலர் இளங்கோவன், சுற்றுலா தலத்திற்கு வந்த பொதுமக்களிடம் தூய்மையே சேவை பற்றிய நோக்கத்தையும் அதன் அவசியத்தையும் எடுத்து கூறினார். இதில் அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிங்காரவேலு, நாகராஜன், புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மாணவர்கள் அழகுமணி, முருகேசன், வேலுமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story