பரிமாற்று திட்டத்தின்கீழ் 2 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
பரிமாற்று திட்டத்தின்கீழ் 2 பள்ளிகளை சேர்ந்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது பாடம் நடத்துவதில் ஆசிரியர்கள் கையாண்ட அணுகுமுறை வித்தியாசமாக இருந்ததாக மாணவ-மாணவிகள் தெரிவித்தனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கிராமப்புற நடுநிலைப்பள்ளி மாணவர்களை நகர்புற பள்ளிக்கு அழைத்து சென்றும், நகர்புற பள்ளி மாணவர்களை கிராமப்புற பள்ளிக்கு அழைத்து சென்றும் பாடம் கற்பிப்பதற்காக மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கடந்த ஆண்டு முதல் பள்ளி பரிமாற்று திட்டம் மற்றும் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாணவ, மாணவிகளின் கற்றல் திறன் மேம்பாடு அடைவதோடு ஒரு புதிய அனுபவத்தை பெற்று கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறது. நகர, கிராமப்புற கல்வி சூழலை அறிந்து கொள்ளவும் முடிகிறது. புதிய நட்பு வட்டாரங்கள் மாணவ, மாணவிகளுக்கு கிடைப்பதற்கும் இந்த திட்டம் அடித்தளமாக இருக்கிறது.
அந்த வகையில் வேப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியிலுள்ள கொத்தவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் 20 மாணவ, மாணவிகளை ஆங்கில பட்டதாரி ஆசிரியர் இளவழகன், வரலாறு பட்டதாரி ஆசிரியர் முத்துகுமார் ஆகியோர் வேன் மூலம் பெரம்பலூர் அருகேயுள்ள குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அழைத்து வந்தனர். பள்ளி பரிமாற்று திட்டத்தின் கீழ் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் கல்வி பயில வந்திருக்கும் அந்த கிராமப்புற மாணவ, மாணவிகளை குரும்பலூர் அரசுபள்ளி தலைமை ஆசிரியர் கஜபதி உள்பட ஆசிரியர்கள் வரவேற்றனர். இதையடுத்து கொத்தவாசல் பள்ளி மாணவ, மாணவிகள் வகுப்பறைக்கு சென்று அங்கு ஏற்கனவே படித்து வரும் மாணவர்களிடம் அறிமுகப்படுத்தி கொண்டு அமர்ந்தனர். முகம் தெரியாத அந்த மாணவர்கள் தங்களது கைகளை குலுக்கி நட்பை வெளிப்படுத்தினர்.
அதனை தொடர்ந்து வழக்கம் போல் நிர்ணயிக்கப்பட்ட பாடவேளையின்படி ஆசிரிய, ஆசிரியைகள் ஒவ்வொருவராக வந்து பாடத்தை கற்பித்தனர். அப்போது கணிதம், அறிவியல் உள்ளிட்ட கடினமான பாடங்களை எழுதில் புரிந்து கொண்டு படிப்பது குறித்து கிராமப்புற மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. குரும்பலூர் பள்ளி மாணவ, மாணவிகளும் தங்களுக்கு கற்பிக்கப்படும் முறைகள் குறித்தும், பாடம் படிப்பதில் தாங்கள் கடைபிடிக்கும் நுணுக்கம் குறித்தும் புதிதாக வகுப்பறைக்கு வந்த கொத்தவாசல் மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டனர். பின்னர் மதியம் வாழை இலை போட்டு கூட்டு, பொறியல் உள்ளிட்டவற்றுடன் மதிய உணவு அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் வழங்கப்பட்டது. குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் பாடம் நடத்தும் அணுகுமுறை வித்தியாசமாக இருந்ததாகவும், கல்வி முன்னேற்றத்திற்கு பயனுள்ளதாக இருப்பதாகவும் கொத்தவாசல் பள்ளி மாணவ, மாணவிகள் தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரவீந்திரன் செய்திருந்தார். இந்த மாதத்தின் 4-வது வாரத்தில் குரும்பலூர் பள்ளி மாணவ, மாணவிகள் கொத்தவாசல் பள்ளிக்கு செல்ல உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
இதே போல் நாட்டார்மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளியை சேர்ந்த மாணவிகள் 20 பேர் பெரம்பலூர் தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும், உடும்பியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும் நேற்று வருகை தந்து பள்ளி பரிமாற்று திட்டத்தின் கீழ் சந்திப்பு நிகழ்ச்சியுடன் கல்வி பயின்றனர். மேலும் இந்த திட்டத்தின்கீழ் பள்ளி மாணவர்களை சுற்றுலாத்தலம் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச்செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாதத்திற்கு ஒரு நாள் வீதம் 6 நாட்கள் இந்த திட்டத்தின் கீழ் வேறு பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு முடிவில் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் பொருட்டு கண்காட்சி நடத்தப்படுகிறது. அப்போது தங்களது சிந்தனையில் உருவான ஓவியம், கவிதை, கட்டுரை மற்றும் வாழ்வியல் பயன்பாட்டிற்கு தேவையான படைப்புகள் உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்க இருக்கின்றனர்.

Related Tags :
Next Story