செங்கால் ஓடையின் அணைக்கட்டினை கலெக்டர் லட்சுமிபிரியா ஆய்வு


செங்கால் ஓடையின் அணைக்கட்டினை கலெக்டர் லட்சுமிபிரியா ஆய்வு
x
தினத்தந்தி 12 Oct 2017 4:00 AM IST (Updated: 12 Oct 2017 3:32 AM IST)
t-max-icont-min-icon

செங்கால் ஓடையின் அணைக்கட்டினை கலெக்டர் லட்சுமிபிரியா ஆய்வு

வரதராஜன்பேட்டை,

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டார வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் லட்சுமிபிரியா ஆய்வு செய்தார். ஆய்வின் போது கூவத்தூர் கிராமத்தில் எந்திரநடவு மூலம் நடவு செய்த வயல் மற்றும் பசுந்தாள் உரப் பயிரான தக்கைப்பூண்டு விதைத்த வயலை பார்வையிட்டு அதனால் மண்ணில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து கேட்டறிந்தார். அதன் பிறகு கூ.குடிகாடு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள மண்புழு உரம் தயாரிப்பு தொட்டி, பஞ்சகவ்யா கரைசல் தயாரிப்பு, மீன் அமினோ அமிலம் தயாரிப்பு, இயற்கை முறையில் பூச்சிவிரட்டி தயாரித்தல், அசோலா வளர்ப்பு ஆகியவற்றையும் பார்வையிட்டார்.

மேலும் ஆண்டிமடம் ஒன்றியம் மு.குப்பம் கிராமத்தில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையின் பராமரிப்பில் உள்ள செங்கால் ஓடையின் அணைக்கட்டினை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த அணைக்கட்டு வாயிலாக நெட்டலக்குறிச்சி பெரிய ஏரிக்கு தண்ணீர் செல்வதால் 83.64 எக்டர் விவசாய நிலங்கள் பயன்பெறுவதாகவும், திருகளப்பூர் பெரிய ஏரியின் வாயிலாக 74.83 எக்டர் நிலப்பரப்பில் விவசாய நிலங் களும் பயன்பெறுவதாகவும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கலெக்டரிடம் தெரிவித்தனர். இந்த ஆய்வின்போது, வேளாண்மை இணை இயக்குனர் அய்யாசாமி, மாவட்ட நீர்வடி பகுதி மேம்பாட்டு முகமை துணை இயக்குனர் அண்ணாதுரை, ஆண்டிமடம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் காசிநாதன், வேளாண்மை அலுவலர் கலைச்செல்வி, சுகந்தி மற்றும் அலுவலர்கள் உட னிருந்தனர். 

Related Tags :
Next Story