விடிய, விடிய பலத்த மழை காட்டாற்று வெள்ளத்தில் பாலம் அடித்து செல்லப்பட்டது போக்குவரத்து துண்டிப்பு
துறையூர் அருகே விடிய, விடிய பலத்த மழை பெய்தது. இதன்காரணமாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் பாலம் அடித்து செல்லப்பட்டது.
துறையூர்,
திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு காற்று, இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை இரவு முழுவதும் கொட்டித் தீர்த்தது.
இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. துறையூரை அடுத்த ஒட்டம்பட்டி-நரசிங்கம்பட்டி செல்லும் சாலையின் கீழ் உள்ள ஆற்றில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெத்து ஓடியது. இதில் அந்த ஆற்றின் மேல் அமைக்கப்பட்டிருந்த பாலம் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதன் காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டது.
மேலும் துறையூர் பகுதியில் உள்ள விவசாய வயல்களில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக, பயிரிடப்பட்டிருந்த சோளப்பயிர்கள் காற்று காரணமாக அடியோடு சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். மரம், செடி-கொடிகளும் ஆங்காங்கே சாய்ந்தன. இதேபோல துறையூரை அடுத்த வண்ணாடு, கோம்பை ஊராட்சி பகுதிகளிலும் விடிய, விடிய பலத்த மழை பெய்தது.
பச்சைமலையில் உள்ள 3-வது கொண்டைஊசி சின்னப்பழமலை பிரிவு சாலையில் மண் சரிவு ஏற்பட்டது. பச்சைமலை அடிவாரத்தில் உள்ள செங்காட்டுப்பட்டி அரசினர் மாணவர் விடுதியை மழைநீர் சூழ்ந்தது. இதன் காரணமாக அங்கு தங்கியிருந்த 75 மாணவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் தூரிவாரி மழைநீர் வெளியேற்றப்பட்டது. அதேபோல மரம், செடி, கொடிகளும் அகற்றப்பட்டன. அதேபகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்குள் மழைநீர் புகுந்ததில் அங்கு வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் நனைந்தன.
மழை பாதிப்புகளை முசிறி உதவி கலெக்டர் ராஜ்குமார், துறையூர் தாசில்தார் சந்திரகுமார், மண்டல துணை தாசில்தார் ஆறுமுகம் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். பின்னர், மழைநீரால் அடித்து செல்லப்பட்ட பாலத்தை உடனடியாக சீரமைக்க உத்தரவிட்டனர். மேலும், மண்சரிவு ஏற்பட்ட இடத்தையும் பார்வையிட்டு அங்கும் மீட்பு பணிகளை துரிதமாக செய்ய உத்தரவிட்டனர்.
அவர்களுடன் துறையூர் ஒன்றிய அ.தி.மு.க.செயலாளர் சேனை செல்வம் உடன் இருந்தார்.
பலத்த மழை காரணமாக, புளியஞ்சோலையில் இருந்து வரத்துவாய்க்கால் வழியாக ஜம்பேரிக்கு தண்ணீர் வரத்து அதிகமாக வந்ததால் ஏரி நிரம்பி வழிந்தது. வழிந்து செல்லும் தண்ணீரானது வரத்து வாய்க்கால் வழியாக வெங்கடாசலபுரம் ஏரிக்கும், மாராடி ஏரிக்கும் சென்று கொண்டிருக்கிறது.
பலத்த மழை காரணமாக வைரிச்செட்டிப்பாளையம் ஜம்பேரி 6 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி வழிந்தது. இதனால், அப்பகுதியில் உள்ள 7 கிராமங்களைச்சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதேபோல மழைபெய்தால் இன்னும் இரண்டொரு நாட்களில் வெங்கடாசலபுரம் ஏரி நிரம்பி வழிந்து விடும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
இந்த மழை, வெள்ளம் குறித்து ஒட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி தங்கவேல் கூறுகையில், கடந்த மாதம் இதேபோல பலத்த மழை பெய்தது. கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு துறையூர் பகுதியில் தற்போது பலத்த மழை பெய்துள்ளது என்றார்.

Related Tags :
Next Story