மந்தையம்மன் கோவில் திருவிழாவையொட்டி காய்கறி, நாணயங்களால் கோலம் போட்ட பெண்கள்


மந்தையம்மன் கோவில் திருவிழாவையொட்டி காய்கறி, நாணயங்களால் கோலம் போட்ட பெண்கள்
x
தினத்தந்தி 12 Oct 2017 6:46 AM GMT (Updated: 2017-10-12T12:16:24+05:30)

கூடலூர் 1-வது வார்டில் மந்தையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா, கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது.

கூடலூர்,

 இதையொட்டி நேற்று காலை பெண்களுக்கான கோலப்போட்டி நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கோலம் போட்டனர். வண்ணப்பொடிகளால் மட்டுமின்றி காய்கறி, பூக்கள், நாணயங்களால் கோலம் போட்டு பெண்கள் அசத்தினர்.

இதேபோல் ஆண்களுக்கு மாரத்தான், கயிறு இழுத்தல், பானை உடைத்தல் ஆகிய போட்டிகளும், சிறுவர்களுக்கு ஓட்டப்பந்தயம், சாக்கு ஓட்டம் உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு கோவில் கமிட்டியினர் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

Next Story