விழுப்புரத்தில், காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


விழுப்புரத்தில், காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Oct 2017 8:00 PM IST (Updated: 12 Oct 2017 12:41 PM IST)
t-max-icont-min-icon

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

விழுப்புரம்,

விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று மாலை விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய மாவட்ட தலைவர் ஆர்.டி.வி. சீனிவாசக்குமார் தலைமை தாங்கினார். நகர தலைவர் செல்வராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் தயானந்தம், முன்னாள் மாநில செயலாளர் சிறுவை ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊழல் புகாரில் சிக்கிய பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா மற்றும் அவரது மகன் ஜெய்ஷா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டுள்ளதை கண்டித்தும், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சிவா, ராஜாராமன், மோகனகிருஷ்ணன், மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர் சுரேஷ்ராம், மாவட்ட செயலாளர்கள் குப்பன், ராஜ்குமார், பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாவட்ட தலைவர் நாராயணசாமி, முன்னாள் பேரூராட்சி தலைவர் வாசிம்ராஜா, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் பாலன், தன்சிங், வட்டார தலைவர்கள் ராதா, சேட்டு, அன்பு, காசிநாதன், நகர துணைத்தலைவர் ஜெயபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story