கோமுகி அணையில் இருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றம்
கல்வராயன்மலையில் பெய்த பலத்த மழையால் நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து கோமுகி அணையில் இருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
கச்சிராயப்பாளையம்,
இதனால் கோமுகி கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கல்வராயன்மலை அடிவாரத்தில் 46 அடி கொள்ளளவு கொண்ட கோமுகி அணை உள்ளது. இந்த அணையின் பாதுகாப்பு கருதி 44 அடி வரை தண்ணீர் சேமித்து வைத்து ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பது வழக்கம். அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் புதிய மற்றும் பழைய பாசன வாய்க்கால்கள் மூலமாக கச்சிராயப்பாளையம், வடக்கனந்தல், கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள 10 ஆயிரத்து 860 ஏக்கர் விளை நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறுகிறது.
மேலும் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கிளை வாய்க்கால்கள் மூலம் 50-க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு செல்கிறது. அந்த ஏரிகளில் இருந்து சுமார் 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விளை நிலங்களும் பாசன வசதி பெற்று வருகிறது. கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்து போனதாலும், கடும் வறட்சியாலும் கோமுகி அணை தண்ணீரின்றி வறண்டு போனது. இதனால் கோமுகி பாசன விவசாயிகள் கடந்த ஆண்டு சம்பா சாகுபடியில் அதிகளவில் ஈடுபடவில்லை.
இந்தநிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெப்பசலனம் காரணமாக கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதேபோல் விழுப்புரம் மாவட்டம் கல்வராயன்மலை நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்தது. இதன் காரணமாக கல்வராயன்மலை அடிவாரத்தில் வறண்டு கிடந்த கோமுகி அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 41 அடியை எட்டியது. இதையடுத்து கடந்த 5-ந்தேதி அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் கோமுகி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வந்தது.
கடந்த 8-ந்தேதி நள்ளிரவு பெய்த மழையால் கோமுகி அணையின் நீர்மட்டம் 43 அடியாக உயர்ந்தது. அதைத்தொடர்ந்து அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட் டது. இதற்கிடையே நீர்வரத்து குறைந்ததால், அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது.
இந்தநிலையில் கல்வராயன்மலை நீர்பிடிப்பு பகுதியில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு தொடங்கிய மழை நேற்று அதிகாலை 3 மணி வரை பலத்த மழையாக கொட்டித்தீர்த்தது. இந்த மழையால் கல்படை, பொட்டியம், மாயம்பாடி ஆகிய ஆறுகள் வழியாக கோமுகி அணைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி முதல் நேற்று காலை 6 மணி வரை வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. இதனால் 43 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் 44 அடியை எட்டியது.
ஒரே நாள் இரவில் அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வருவதை அறிந்த மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் தண்ணீரை அப்படியே வெளியேற்றுமாறு உத்தரவிட்டார்.
அதன்அடிப்படையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி முதல் நேற்று காலை 6 மணி வரை அணையில் இருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீரை மதகுகள் வழியாக ஆற்றில் வெளியேற்றினர். இதனால் கோமுகி ஆற்றையொட்டி உள்ள கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கோமுகி அணைக்கு வரும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைந்ததை தொடர்ந்து, நேற்று காலை 6 மணிக்கு பிறகு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதற்கிடையே கல்வராயன்மலையில் இருந்து அணைக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கல்படை ஆறு தரைப்பாலம் மூழ்கியது. இதனால் மல்லிகைபாடி, பரங்கிநத்தம் அதன்சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கல்படை ஆறு தரைப் பாலத்தை ஆபத்துடன் கடந்து கச்சிராயப்பாளையம், கள்ளக்குறிச்சி போன்ற நகர் புறங்களுக்கு சென்று வருகின்றனர். இதுகுறித்து கல்படையை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ஆண்டுதோறும் கல்வராயன்மலையில் பெய்யும் மழை காரணமாக கல்படை ஆறு வழியாக கோமுகி அணைக்கு தண்ணீர் செல்லும்போது, ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் மூழ்கி வருவது வாடிக்கையாக உள்ளது.
இதனால் வாகன போக்குவரத்து முற்றிலும் துண்டிப்பதால், இந்த தரைப்பாலம் வழியாக செல்லும் கிராம மக்கள் தங்களது உயிரை கையில் பிடித்து கொண்டு தரைப்பாலத்தை கடந்து செல்கின்றனர். எனவே கல்படை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்களின் பாதுகாப்பு கருதி கல்படை ஆற்றில் தரைப்பாலம் உள்ள இடத்தில் புதிதாக மேம்பாலம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Tags :
Next Story